கெட்டுப்போன இறைச்சி, சீல் செய்யப்பட்ட பிரியாணி கடை – இர்பான் வீடியோவை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.

0
61827
irfan

யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார்.

இந்த நிலையில் உணர்வு விமர்சகர் இர்பான் சாப்பிட்டு ரிவியூ போட்ட பிரியாணி பிரதர்ஸ் வீடியோவிற்கு கீழ் ரசிகர்கள் பலரும் இர்பானை கடுமையாக விமர்சித்து கமன்ட் போட்டு வருகின்றனர். சென்னை தாம்பரம் சோலையூர் சாலையில் அமைந்துள்ளது தான் காரைக்குடி பிரியாணி பிரதர்ஸ் ஹோட்டல். இந்த ஓட்டலில் திடீரென்று இன்று உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.

- Advertisement -

அப்போது நேற்று சமைத்த பிரியாணி அண்டாவை பிரிஸரில் வைத்து அதை சூடு செய்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்கள். அதே போல் இஞ்சி, பூண்டு, மஞ்சள், மிளகாய் பொடி போட்ட நிலையில் நாட்கணக்கில் பிரீசரில் வைக்கப்பட்டிருந்த துர்நாற்றம் வீசிய சிக்கன் இறைச்சியை ஏராளமாக வைத்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு முன்னாடி செய்து வைத்த 50 முட்டைகளும் ஃப்ரீசரில் வைத்து இருந்தார்கள்.

கெட்டுப்போன 45 கிலோ பிரியாணி, தரமற்ற சிக்கன், மட்டன், மீன் இறைச்சிகளை வைத்து சமையல் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி உள்ளார்கள். இதை கண்டுபிடித்து உணவு பாதுகாப்பு துறையினர் அதிகாரி ஓட்டலுக்கு பூட்டு போட்டு சீல் வைத்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் இந்த ஹோட்டலில் உணவை ஆர்டர் செய்து இர்பான் சாப்பிட்டு அதற்கு நல்ல review கொடுத்துள்ளார் என்று ரசிகர்கர்கள் இர்பானின் அந்த வீடியோவில் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த ஓட்டலை தான் உணவு விமர்சகர் இர்பான் தரமான ஓட்டல் என்று கடந்த இரண்டு மாதங்களுக்கு சாப்பிட்டு வீடியோ போட்டிருந்தார் என்றும் இதனால் இர்பான் பதிவிட்ட வீடியோ குறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காசுகாகவும், பிரபலத்திற்காகவும், டிஆர்பி ரேட்க்காகவும் இப்படி தரமற்ற ஓட்டல் குறித்து வீடியோ போடுவது தவறான செயல். தயவுசெய்து இந்த மாதிரி தவறான கடைகளை குறித்து வீடியோக்களை போடாதீர்கள் என்று எச்சரித்தும் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.

Advertisement