அதிமுக மாநாட்டில் டன் கணக்கில் வீணடிக்கப்பட்ட உணவுகள் அது குறித்து விளக்கம் அளித்த சமையல் மாஸ்டர்.

0
485
- Advertisement -

மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் எழுச்சி மாநாட்டில் டன் கணக்கு உணவுகள் வீண்அடிக்கப்பட்டு மாநாடு நடைபெற்ற இடத்திலேயே கிழே கொட்டப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் அதிமுக தொண்டர்கள் வருகை தந்தனர். மாநாட்டிற்கு வருகை தந்த தொண்டர்களுக்கு மூன்று வேலையும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.

-விளம்பரம்-

மூன்று இடங்களில் தொண்டர்களுக்காக உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மாநாட்டில் லட்ச கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் உணவு கூடங்களில் சுமார் 10,000 தொழிலாளர்கள் உணவுகளை சமைத்து அங்கு வந்த தொண்டர்களுக்கு பரிமாறி வந்தனர். சாம்பார் சாதம், புளியோதரை சாதம் போன்றவை உணவுகள் அவர்களுக்கு தயார் செய்து வழங்கப்பட்டது. மொத்தம் 10 லட்சம் பேருக்கு உணவுகள் தயார் செய்யப்பட்டதாக மாநாட்டு ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா கூறியிருந்தனர்.

- Advertisement -

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த மாநாட்டில் காலை முதலே அங்கு வந்த தொண்டர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. அங்கு வந்த தொண்டர்களுக்கு மூன்று வேலை மட்டுமல்லாமல் இரவு வரை உணவுகள் வழங்கபட்டது. நேற்று மாநாடு முடிவடைந்த நிலையில் அங்கு தொண்டர்களுக்கு தயார் செய்த. புளியோதரை உணவுகள் அங்கு அண்டா அண்டாவாக கொட்டப்பட்டு வீண் அடிக்கப்பட்டது. கொட்டப்பட்டு இருந்த உணவுகளின் மீது வாகனகள் ஏறி சென்றுள்ளது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மாநாட்டில் வீண் அடிக்கப்பட்ட உணவுகளை பொறுப்பாளர்களும் உடனடியாக ஆதரவற்ற இல்லங்கள், எத்தனையோ சாப்பாடு இல்லாமல் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு விநியோகம் செய்திருக்கலாம். என்ற ஆதங்கம் பொது மக்களிடம்  எழுந்துள்ளது.              

-விளம்பரம்-

இது குறித்து கூறிய மாநாடு பொறுப்பாளர்கள் ‘ மாநாட்டிற்கு வெளிமாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கொடியேற்றும் நிகழ்விற்கு வர வேண்டும் என்றும் தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாநாட்டின் முன் தினமே வந்து விட்டனர். அவர்களுக்கு உணவு தயார் செய்யப்பட்டது. மாநாட்டிற்கு வந்த தொண்டர்கள் கலையிலே சாப்பிட்டுவிட்டு வந்தனர். மாநாட்டிற்கு வந்த பலர் அருகே உள்ள இடங்களில் உணவு சமைத்து சாப்பிட்டனர். இன்னும் வெளியுர்களில் இருந்து வந்தவர்கள் மதியதிர்க்கு முன்னதாகவே அங்கிருந்து சென்றனர். நிறைய தொண்டர்கள் மதியதிற்கு மேல் வந்தனர்கள். ஆகவே தேவைக்கு அதிகமாக உணவு தயாரிக்கப்பட்டு வீண் அடிக்கப்பட்டது என்றனர்.

சமையல் மாஸ்டர் கூறுகையில் சாம்பார் சாதம் மாநாடு பந்தலில் சுட சுட வழங்கப்பட்டது 5 மணி வரை வரைக்கும் வழங்கபட்ட்டது. அதனால் அங்கு வந்தோர் அதை விரும்பி வாங்கி சாப்பிட்டனர். ஆனால் புளியோதரை இரவே தயாரிக்க பட்டது அதனால் அந்த சாப்பாடு மீதமானது என்றனர். இந்த மீதமான உணவுகளை ஏற்றி செல்ல 150பேரை வைத்துள்ளோம்

Advertisement