அடிபட்டு பிணம் மாதிரி இருந்தேன், அப்போ தூக்கிட்டு போகும் போது கூட ஒருத்தன் என்னை – வம்சம் பூமிகாவின் கண்ணீர் பேட்டி.

0
2292
Bhoomika
- Advertisement -

சாகுற நிலைமையில் கூட எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்கள் என்று நடிகை சீரியல் நடிகை சந்தியா கொடுத்திருக்கும் அதிர்ச்சி தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வம்சம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சந்தியா ஜகர்லமுடி. இவர் ஹைதராபாத்தில் பிறந்தார். இவர் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானார். பின் சன் டிவி-யில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்.

-விளம்பரம்-

அதன் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடித்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சந்தியா. இந்த சீரியலில் மலைவாழ் பெண் கதாபாத்திரத்தில் சந்தியா வாழ்ந்து இருந்தார் என்றே சொல்லலாம். அதோடு இவர் வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு அடுத்ததாக மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த அளவுக்கு வம்சம் சீரியல் சந்தியாவுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும், சில தெலுங்கு சினிமாவிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

கடைசியாக இவர் தமிழில் பல ஆண்டுகளாக சன் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் கொடுத்த சந்திரலேகா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது தவிர இவர் தெரு நாய்களை பாதுகாப்பதையும் பகுதி நேரம் தனியாகவே செய்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் நடிகை சந்தியா அவர்கள் பிரபல யூட்யூப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், 2006 இல் கும்பகோணத்தில் செல்லமடி நீ எனக்கு டைட்டில் பாடல் எடுக்கும்போது கோயில் யானை உடன் சூட் எடுக்கப்பட்டது. அப்போது அது என்னை தாக்கியது. இதுவரை எனக்கு யானை மீது எந்த கோபமும் இல்லை. யானை தாக்கியதில் ஏழு இடங்களில் எனக்கு முறிவு ஏற்பட்டது.

பின் யானை தாக்கியதில் நான் மயங்கி விழுந்து விட்டேன். பிழைத்ததே பெரிய விஷயம். யானை என் மேல் கால் வைத்தது என்று நினைத்தேன். ஆனால், அது தும்பிக்கையில் தான் என்னை நசுக்கியது. அதுவே என்னால் தாங்க முடியவில்லை. காயம் ஏற்பட்டதில் என்னை எல்லோரும் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால், என்னை ஆண் நடனப் பயிற்சியாளர்கள் தான் தூக்கி சென்றார்கள். அதில் ஒருவர் என் மார்பில் கை வைத்திருந்தார். என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் அதை தான் நான் சொல்வேன். கிட்டத்தட்ட நான் பிணம் மாதிரி இருந்தேன். பிணத்தை கூடவாய் இப்படி செய்வாங்க? என்னை தூக்கி செல்லும்போது என் மார்பில் கைவைத்த அந்த டான்சர் யார் என்று எனக்கு தெரியாது.

-விளம்பரம்-

என் அம்மாவிடம் கூட அதை நான் சொல்லவில்லை. என் நிலையை பார்த்து என் அம்மா உடைந்து போய்விட்டார். அவரிடம் இதை எப்படி கூறுவது என்று எனக்கு தெரியவில்லை. அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு. அதற்கு பிறகு யானை என்னை மிதித்ததற்கு காரணம் நான் மாதவிடாய் காலத்தில் இருந்ததனால் என்று கூறியிருந்தார்கள். பின் குற்றம் நடந்தது என்ன ஒரு நிகழ்ச்சியில் என்னுடைய டாபிக் தான் போனது. அதில் அவர்கள் நான் அணிந்திருந்த ஆடை நிறம் பிடிக்காமல் போயிருக்கலாம் என்றெல்லாம் பேசி இருந்தார்கள் நான் மாதவிடாயில் இருந்ததை யார் தூக்கி பார்த்தது.

எதை வைத்து இப்படி பேசுகிறீர்கள். நான் சொன்னால் தானே அது உண்மை. யாரோ யாரை காப்பாற்ற இந்த நிகழ்ச்சியை போட சொன்னார்கள் என்று கூட எனக்கு தெரியாது. 2019ல் மீண்டும் அந்த கோயிலுக்கு யானை பார்க்க சென்றேன். தூரத்தில் நின்று பார்த்தேன். அந்த யானை வரும் போது நான் காசு கொடுக்க வேண்டும். யானை ஆசீர்வாதம் செய்யும். அது ஷூட்டிங் யானை கிடையாது கோயில் யானை. டேக் எடுக்கும் போது முன்பு கொடுத்த அதே ரூபாயை எடுத்து மீண்டும் யானைக்கு கொடுக்க சொன்னார்கள். எனக்கு இதெல்லாம் தெரியாது. மூன்றாவது டேக் எடுக்கும் போது மீண்டும் அதே நோட்டை கொடுத்தார்கள். யானைக்கு கோபம் வந்துவிட்டது. இவள் நம்மை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்து தான் அது என்னை தாக்கியது. இதை என்னிடம் கேட்டிருக்கலாமே, எதற்கு விவாதம் ஆக்கினார்கள் என்று வேதனையில் கூறியிருந்தார்

Advertisement