எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணியை விட்டிருப்பீங்க – மாநாடு அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபுவை கேள்வி கேட்ட நடிகர்.

0
1063
kalyani
- Advertisement -

சினிமா உலகில் தலைமுறை தலைமுறையாக வாரிசுகள் படங்களில் நடித்தும், இயக்கியும் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷனும் ஒருவர். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான திரைப்பட இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பிரியதர்ஷன். இவருடைய மகள் தான் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் பிரியதர்ஷன் அவர்கள் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் இயக்கி உள்ளார். தற்போது பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் அவர்களும் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

கல்யாணி பிரியதர்ஷன் முதலில் பாலிவுட் திரைப்படத்தில் துணை தயாரிப்பு வடிவமைப்பாளராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து துணை கலை இயக்குனராக திரைப்படத்தில் பணி புரிந்தார். பின் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘ஹலோ’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தமிழில் அறிமுகமானது என்னவோ சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஹீரோ’ திரைப்படத்தின் மூலம் தான்.

- Advertisement -

இந்த படத்திற்கு பின்னர் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்திலும் நடித்து வருகிறார். நடுவில் சில தோல்வி படங்கள் வந்த நிலையிலும் ரசிகர்கள் அவரை கை கொடுத்து தூக்கி விட்டனர்.செக்கசிவந்தவானம், வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படங்கள் மூலம் மீண்டும் சினிமா களத்தில் இறங்கினர்.இந்த படங்களை தொடர்ந்து சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைப்பததற்கு வெளிநாடு சென்று தீவிர கவனம் செலுத்தி வந்த சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வந்தார்.

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர், மாநாடு படம் மீண்டும் துவங்கி இருக்கிறது. இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி ,மனோஜ் பாரதிராஜா, டேனியல் என்று பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ட்வீட் ஒன்றை போட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதில் நாளை தயாராக இருங்கள் எஸ்டிஆர் ரசிகர்களே நாளை காலை 09.09 து மணிக்கு மாநாடு படத்தின் சிறப்பு அறிவிப்பு வெளியாக இருக்கிறது என்று பதிவிட்டு சிம்பு, எஸ் ஜே சூர்யா படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி யுவன் சங்கர் ராஜா போன்ற மாநாடு படத்தின் அத்தனை நபர்களையும் டேக் செய்திருந்தார். ஆனால், படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷனை பேக் செய்ய மறந்ததால் கடுப்பான நடிகரும் வெங்கட்பிரபுவின் சகோதரருமான பிரேம்ஜி என்ன தைரியமிருந்தால் கல்யாணி பிரியதர்ஷன் பெயரை விட்டிருப்பாய் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement