நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை துபாயில் இறந்துவிட்டார். அன்று முதல் தற்போது வரை இந்திய மீடியாக்களில் ஸ்ரீதேவி மட்டும் தான் செய்தி. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் ஸ்ரீதேவியை பற்றி தான் பேசிக்கொண்டு இருந்தனர்.
ஆனால் தமிழக்கத்தில் நிலைமையே வேறு. உலகிற்கே அறம் கற்றுக்கொடுத்த தமிழகத்தில் மனிதாபிமானத்திற்கு தான் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
ஸ்ரீதேவி இறந்த சில நாட்களில் தமிழகத்தில் சிரியாவில் நடைபெரும் உலக அரசியலுக்கான போர் குறித்து ட்ரெண்ட் ஆனது. அன்று முதல் இன்று வரை ஸ்ரீதேவியை ஓரம் தள்ளி வைத்துவிட்டு சிரியாவைப் பற்றி தமிழக மக்களும் இளைஞர்களும் கூகுலில் தேடி உள்ளனர்.
இந்தியாவில் ஸ்ரீதேவியை பற்றி பேசியதில் 20வது இடத்திலும், சிரியாவை பற்றி தேடியதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன்மூலம் ஸ்ரீதேவியை விட சிரியாவின் போருக்கு தான் தமிழக மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.