பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட டாப் 100 பிரபலங்கள். விஜய், அஜித் எந்த இடம். நயன் லிஸ்ட்லே இல்ல.

0
2290
rajini-vijay
- Advertisement -

போர்ப்ஸ் பத்திரிக்கை சிறந்த 100 பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதில், அஜித் விஜய் அவர்கள் பிடித்த இடத்தை குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். பிரபல ஆங்கில இதழ் போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தியாவில் சிறந்த 100 பிரபலங்களுக்கான பட்டியலை வருடம் வருடம் வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. துறை சார்ந்த பங்களிப்பு, வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதில், இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டுவோரின் டாப் பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும், வருடம் வருடம் போஸ்ட் பத்திரிக்கை நிறுவனம் சிறந்த பிரபலங்களுக்கான பட்டியலை வெளியிடுவதில் சினிமா பிரபலங்கள் மட்டுமில்லாமல் பல தொழில்களில் பிரபலமாக இருப்பவர்கள் பெயர்களும் வரும்.

-விளம்பரம்-

- Advertisement -

அப்படி இந்த வருடம் வெளியிட்ட சிறந்த நூறு பிரபலங்களின் பட்டியலில் கிரிக்கெட் விளையாட்டு வீரர் விராட் கோலியின் பெயரும் இடம் பெற்று உள்ளது. ரூ. 252 கோடி வருமானம் ஈட்டி கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்கள் முதல் இடம் பிடித்து உள்ளார். இரண்டாவது இடத்தில் அக்‌ஷய் குமாரும், மூன்றாவது இடத்தில் சல்மான் கானும் என அடுத்த அடுத்த இடத்தில் பாலிவுட் நடிகர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் இருந்து மொத்தம் ஒன்பது பேர் சிறந்த பிரபலங்களாக இடம் பிடித்து உள்ளனர். இந்த ஒன்பது பேரில் ரஜினி, விஜய், அஜித், கமல், தனுஷ் ஆகிய நடிகர்களும்; சங்கர், சிறுத்தை சிவா, கார்த்திக் சுப்பராஜ் என்ற மூன்று இயக்குனர்களும்; ரகுமான் இசை கலைஞர் என மொத்தம் 9 பேர் இடம் பிடித்து உள்ளார்.

மேலும், இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 13 வது இடத்தை பிடித்து உள்ளார். இவருக்கு பிறகு ஏ. ஆர். ரகுமான் 16 வது இடத்தை பிடித்து உள்ளார். தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்துக்கு பிறகு முடிசூடா மன்னராக விளங்கி வருபவர் விஜய். விஜய் அவர்கள் 47 வது இடத்தையும், தல அஜித் அவர்கள் 52 ஆவது இடத்தையும் பெற்று உள்ளார்கள். இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து இயக்கிய சிறுத்தை சிவா பட்டியலில் 80வது இடத்தைப் பெற்று உள்ளார். ரஜினியை வைத்து இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் 84 வது இடத்தைப் பெற்று உள்ளார். ஆனால், விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிய அட்லி அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் அனைவரும் வருத்தம் தெரிவித்தார்கள். அது மட்டும் இல்லாமல் தல அஜித்திற்கு முன் இடத்தில் விஜய் இருப்பதைக் குறித்து ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகிறார்கள்.

-விளம்பரம்-

  • ரஜினிகாந்த்- 13
  • ஏ.ஆர். ரகுமான்- 16
  • இயக்குனர் ஷங்கர்- 55
  • கமல்ஹாசன்- 56
  • தனுஷ்- 64
  • இயக்குனர் சிவா- 80
  • கார்த்திக் சுப்புராஜ்- 84

இந்தி திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் 4வது இடங்களில் உள்ளார். தற்போது ஓய்வில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனி ரூ. 135.93 கோடி வருமானத்துடன் 5வது இடம் பிடித்து உள்ளார். பாலிவுட் திரைப்பட நடிகர்கள் ஷாருக் கான், ரன்வீர் சிங் 6வது மற்றும் 7வது இடத்தையும், நடிகைகள் ஆலியா பட் 8வது இடத்தை பிடித்து உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9வது இடத்தை பிடித்து உள்ளார். மேலும், தீபிகா படுகோனே 10வது இடத்தையும் பிடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement