‘ஷூட்டிங்கிற்கு குளிக்காமல் வந்துவிட்டேன் அதன் இப்போ குளிக்கிறேன்’ – பம்பு செட்டில் குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஜாக்லின்

0
2195
jackline
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பளராக பணியாற்றிய எத்தனையோ பேர் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர், அந்த வகையில் ஜாக்லினும் ஒருவர். கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ்.

-விளம்பரம்-
View this post on Instagram

Kulichitu erukom ?? #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார்.

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த கலாட்டாவின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் தேன்மொழி BA ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.

View this post on Instagram

#shoot #throwback #missings?

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஜாக்லின் அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

-விளம்பரம்-

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். அதுவும் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஜாக்லின் தொடர்ந்து #Throwback புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். தற்போது ஜாக்குலின் ஒரு கிராமப்புற இடத்திலிருந்து ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவரும் அவருடைய துணை நடிகையுடன் சேர்ந்து பம்ப் செட் தொட்டியில் ஜாலியாக குளியல் போட்டுள்ளார். அந்த வீடியோவில், தான் காலையில் ஷூட்டிங்கிற்கு குளிக்காமல் வந்ததாகவும், அதனால் தற்போது குளித்துக் கொண்டிருப்பதாகவும் விளையாட்டாக பேசியுள்ளார்.

Advertisement