பிரபல பத்திரிகையான forbes நிறுவனம் ஆண்டு தோறும் இந்திய அளவில் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அதிகம் சம்பளம் வாங்கும் பிரபலங்கள் என்று வருடா வருடம் தங்களது இணையதள பக்கத்தில் ஆய்வு நடத்தி பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய அளவில் டாப் 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு நபர்கள் டாப் 100 இடத்தை பிடித்துள்ளார். இதில் முதல் இடத்தில் இந்தி நடிகர் சல்மான் கான் இடம்பிடித்துள்ளார்.
தமிழ் சினிமாவை பொறுத்த வரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த டாப் 100 பட்டியலில் 11வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ் நடிகர்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 14வது இடத்தை பிடித்துள்ளார், அவரை தொடர்ந்து நடிகர் விஜய் 26வது இடத்தை பிடித்துள்ளார்.
இதில் ஆச்சர்யம் என்ன வென்றால் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டாரான அஜித்தின் பெயர் இந்த பட்டியலிலேயே இல்லை என்பது தான். தமிழ் சினிமாவின் மற்ற நடிகர்கள் கூட இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் அதில்,விக்ரம் – 29 வது இடம் ,சூர்யா – 34 வது இடம் ,விஜய் சேதுபதி – 34 வது இடம்,கமல் – 71 வது இடம் என்று அந்த பட்டியலில் உள்ளது.