என் சொந்த அக்கா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார் – காதல் குறித்து ஜெயகுமார்

0
1553
jayakumar
- Advertisement -

பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நாளில் பலரும் தங்களுடைய காதல் வாழக்கையை பற்றி கூறிவருகின்றனர். இந்த நாளில் சின்னத்திரை பிரபலங்கள் முதற்கொண்டு வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் வரையில் காதலர் தினத்தின் அவர்களுடைய காதல் வாழ்கை பற்ற நாம் கேட்டிருப்போம், இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மனைவி ஜெயக்குமாரியுடனான காதல் வாழ்கை பற்றி நேற்று பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

என்னுடைய மாமா பட்டியலினத்தவர் :

அவர் அந்த பேட்டியில் கூறுகையில் “காதலுக்கும் எனக்கும் தூரமில்லை, என்னென்றால் நான் காதல் செய்து தான் பதிவு திருமணம் செய்தேன். காதல் என்றால் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். என்னுடைய அப்பா பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டதால் எங்களை ஏற்றுகொண்ண்டார். என்னுடைய சொந்த அக்கா கூட சாதி மறுப்பு திருமணம் தான் செய்து கொண்டார்கள். என்னுடைய மாமா சண்முக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.

- Advertisement -

என்னுடைய பிள்ளைகளுக்கு :

என்னுடைய அக்கா திருமனத்தில் அன்பில் தர்மலிங்கம், சாத்தியவானு முத்து என பலர் கலந்து கொண்டனர். நான் அந்த காலத்து பெற்றோர்கள் போன்று கிடையாது. காதலிக்கிறீர்கள் என்றால் காதலியிங்கள் நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்று கூறினேன், ஆனால் என்னுடைய மூன்று மகன்களும் காதலிக்காமல் அம்மா தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். காதல் என்றால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும், அதுதான் உண்மையான காதல்.

வியட்நாம் அதிபர் சொன்னது :

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆனாலும் கூட எங்களுடைய வாழ்கை நன்றாக செல்கிறது. எங்களுக்குள் பிரச்னை வந்தாலும் அதை நாங்களே பேசி சரி செய்து கொள்வோம். நான் அரசியலில் முழு ஈடுபாடு கொண்டிருக்க காரணம் என்னுடைய மனைவி தான். வியட்நாம் நாட்டின் அதிபராக இருந்த ஹோசிமின் வட வியட்னாமியர்களும், தென் வியட்னாமியர்களும் காதலித்து திருமணம் செய்து கொள்ள சொன்னார். அதன் மூலம் வியட்நாமை இணைத்தார்.

-விளம்பரம்-

மகன்கள் குறித்து ஜெயகுமார்

நான் சொல்லவருவது என்னவேற்றால் இப்பொது உள்ள பெற்றோரோகள் தங்களுடைய குழந்தைகளின் மனப்பக்குவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பெற்றோர்களின் மனதை புரிந்து கொண்டும் பிள்ளைகளும் நடந்து கொள்ள வேண்டும். பெற்றவர்கள் நமக்கு நல்லதுதான் செய்வார்கள். நான் அந்தக் காலத்துப் பெற்றோர் மாதிரி கிடையாது. ‘லவ் பண்ணுறதுன்னா பண்ணுங்க.

சாதி மறுப்பு திருமணம் செய்யுங்கள் :

நான் குறுக்க நிற்கமாட்டேன்’ன்னு என் பிள்ளைங்க மூணு பேர்கிட்டேயும் முன்கூட்டியே சொல்லிட்டேன். ஆனா, மூணு பேருமே அம்மா தலைமையில அரேஞ்சுடு மேரேஜ்தான். எவனும் லவ் பண்ணல.நமது நாட்டின் பிரச்சனையே சாதி, மதம் போன்றவை தான். இவற்றை ஒழிக்க வேண்டும் என்றாலே காதல் செய்யுங்கள். மதம் சாதி தவிர்த்து திருமணம் செய்யுங்கள், கலவரங்கள் ஒழியும் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

Advertisement