அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா..? வெளியான தகவல்

0
486
Ajith

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக “விஸ்வாசம் ” படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக நடந்து வரும் நிலையில் தற்போது படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

visvasam

நீண்ட வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு முதன் முறையாக அஜித் படத்தில் இசையமைக்கவுள்ளார் இமான்.

இந்த படத்திற்காக 4 பாடல்களையும் 1 தீம் மியூசிக்கையும் இமான் முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இமானிற்கு, அஜித்துடன் இது முதல் படம் என்பதால் இந்த படத்தின் தீம் ம்யூசிக்கிற்காக மிகவும் மென்கெட்டுள்ளாராம்.

ajith

பொதுவாக மெலடி என்றால் இமானிற்கு கை வந்த கலை என்பதால் “விஸ்வாசம் ” படத்தில் அஜித்திற்கு, ரசிகர்கள் ரசிக்கும்படியான ஒரு மெலடி பாடலையும் போட்டுள்ளாராம். அதிலும் இந்த படத்தில் அஜித்தின் என்ட்ரி பாடல் மிகவும் மாஸாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.