சினிமாவில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி பல பெண்களின் வாழ்க்கையை மோசம் செய்த போலி இயக்குனர் கைதாகிய சம்பவம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்து அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை மறைமுகமாக வீடியோ எடுத்து மிரட்டி அவர்களிடம் பல லட்சக்கணக்கில் பணம் பறித்த கொடூர போலி இயக்குனர் இமானுவேல் ராமேஸ்வரம் போலீசாரால் கைதாகி உள்ளார். இமானுவேல் ராஜா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 46 வயதாகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரம் வந்து ஐந்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்து உள்ளார்.
பின் சினிமா படம் எடுக்க போவதாக கூறி ஒருவருடன் தனுஷ்கோடி சென்று உள்ளார். அங்கு உள்ள கோவில் ஒன்றில் பூசாரியாக கார்த்திக் ராஜா என்பவரை சந்தித்து தான் திரைப்பட இயக்குனர் சக்தி என்றும் தான் ஒரு திரைப்படம் எடுக்க இருப்பதாகவும் அதில் பூசாரி வேடத்திற்கு ஆள் தேவை என்றும் அதற்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளார். இந்த ஆசை வார்த்தையை நம்பி கார்த்திக்ராஜா ஒரு லட்சம் ரூபாயை இமானுவேலுவிடம் கொடுத்து உள்ளார். பின்னர் தன்னுடன் தன் மனைவியையும் நடிக்க வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு இமானுவேல் சரி என்று கூறி படம் நடித்து வெளியானவுடனே தங்களுடைய சம்பளத்துடன் இந்த பணத்தை சேர்த்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.
பின் இமானுவேல் தங்கியிருந்த ஓட்டலுக்கு கார்த்திக் சென்று உள்ளார். அங்கு வெளிமாவட்டம் சேர்ந்த பெண் ஒருவர் கார்த்திக்கை தனியாக அழைத்து இமானுவேல் ராஜாவை நம்ப வேண்டாம் எனவும் என்னைப்போல் பல பெண்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி எங்களிடம் உல்லாசமாக இருந்து அதனை ரகசிய கேமராக்களில் பதிவு செய்து அதை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டி பணம் பறித்து வருகிறார். என்னிடம் இருந்து நகை பணம் என லட்சக்கணக்கான ரூபாயை பறித்து விட்டார். தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். இதை சுதாரித்து கொண்ட கார்த்திக் ராஜா தன்னுடைய பணத்தை திரும்ப பெற இமானுவேல் ராஜாவை தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் சென்றுள்ளார். அப்போது அங்கு மேசையில் கைதுப்பாக்கி ஒன்று இருந்தது.
இதனால் அச்சமடைந்த கார்த்திக் ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். உடனடியாக போலீசார் இமானுவேல் ராஜாவை தேடி ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். போலீசார் வருவதை அறிந்த இமானுவேல் அறையை காலி செய்து தப்பியுள்ளார். பின்னர் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இமானுவேல் ராஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இமானுவேல் ராஜாவிடமிருந்த செல்போன் முதல் எல்லாத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவருடைய மொபைலில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களுடன் இமானுவேல் இருந்த உல்லாச போட்டோக்கள் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இமானுவேல் ராஜாவிடம் போலீஸ் பாணியில் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு இமானுவேல் ராஜா இணையதளம் மூலமாக பெண்களை அழைத்து அவர்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி உல்லாசமாக இருந்து உள்ளார். பின் அந்த பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சக்கணக்கில் மிரட்டி பணம் வாங்கி உள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது. பின் போலீசார் இமானுவேல் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளார்கள்.