80 பேரில் ஒருவர், பேங்க் அக்கவுன்டில் இருந்து பணம் அபேஸ், நடந்தது என்ன? நடிகை நக்மா விளக்கம்.

0
369
nagma
- Advertisement -

நடிகை நக்மாவின் வங்கி கணக்கிலிருந்து மர்ம நபர் ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டு இருந்தவர் நக்மா. 2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்த காதலன் படத்தின் மூலம் தான் நக்மா தமிழ் சினிமா உலகிற்கு தான் இருந்தார். அதன் பின்னர் கார்த்திக், பிரபுதேவா, ரஜினி, கார்த்திக், நெப்போலியன் என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து இருக்கிறார். அதிலும் பாட்ஷா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் நக்மாவின் மார்க்கெட் எகிறியது. மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், வங்காளி, போஜ்புரி, பஞ்சாபி, மராத்தி போன்ற பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பின் இடைப்பட்ட காலத்தில் கதாநாயகியாக வாய்ப்பை இழந்த நக்மா அஜித் நடிப்பில் வெளிவந்த ‘தீனா’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த சிட்டிசன் படத்தில் ஒரு சிபிஐ அதிகாரியாக நடித்திருந்தார்.

- Advertisement -

அரசியலில் நக்மா:

அதன் பின்னர் சினிமா வாய்ப்பு குறைந்த உடன் இவர் அரசியலில் குதித்து விட்டார். மேலும், நடிகை நக்மா அவர்கள் ஜோதிகாவின் சகோதரி என்பது பலரும் தெரிந்த ஒன்று. ஆனால், திரையுலகில் ஜோதிகா சாதித்த அளவிற்கு நக்மாவால் சாதிக்க முடியாமல் போய்விட்டது. அதோடு நக்மா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு தற்போது 48 வயது ஆகிறது. முதலில் இவர் பாஜகவில் இணைந்தார். அங்கு அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் இவர் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

வங்கி கணக்கு பண மோசடி:

தற்போது நீண்ட காலமாகவே இவர் காங்கிரஸியில் தான் பயணித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை நக்மாவின் வங்கி கணக்கிலிருந்து பண மோசடி செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது, நடிகை நக்மாவின் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்திருக்கிறது. அந்த மெசேஜில் கொடுக்கப்பட்டிருந்த லிங்கை நக்மா கிளிக் செய்து இருக்கிறார். உடனே அவருக்கு யாரோ போன் செய்து பேசி இருந்தார்கள்.

-விளம்பரம்-

நக்மா அளித்த பேட்டி:

அப்போது போனில் பேசிய மர்ம நபர் தன்னை வங்கி அலுவலர் என்று அறிமுகப்படுத்தி வங்கியின் கேஒய்சி புதுப்பிக்க உதவுவதாக கூறியிருந்தார்.இப்படி பேசிக் கொண்டிருக்கும்போதே நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நக்மா மும்பை சைபர் கிரைம் காவல்துறையினிடம் புகார் அளித்திருந்தார். மேலும், இது தொடர்பாக நக்மா, எனக்கு நிறைய மெசேஜ் வந்தது. அந்த மெசேஜ் கொடுக்கப்பட்ட லிங்கில் கேட்கப்பட்ட எந்த விவரங்களையும் நான் கொடுக்கவில்லை.

செல்போனில் பேசிய மர்ம நபர் kyc புதுப்பித்து தருவதாக கூறி இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்குக்கு பணத்தை மாற்றி இருக்கிறார். நல்ல வேலை பெருசாக போகவில்லை என்று கூறினார். அதுமட்டுமில்லாமல் மும்பையில் கடந்த சில தினங்களாகவே இந்த மாதிரி பணமோசடி அதிக அளவில் நடந்து வருகிறது. 80 பேரிடம் இருந்து இதுவரை பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் நக்மா நூதனமாக புரிந்து கொண்டு தப்பித்து இருக்கிறார்.

Advertisement