போதையில் நண்பனை கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்..! உயிரிழந்த சோகம் ..! அதிர்ச்சி வீடியோ

0
293
Murder

குடி உயிரை கொள்ளும் என்பதற்கு இணங்க குடி போதையில் உயிரிந்தவர்களை பற்றி நாம் பல கதைகளை கேட்டுள்ளோம். அந்த வகையில் அத்து மீறிய போதையில் நண்பர்களுடன் சேர்ந்து விளையட்டாக செய்த செயல் விபரீதத்தில் முடிந்த செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகில் நண்பர்கள் கூட்டாக மது அருந்திவிட்டு போதையில் சக நண்பனையே கிணற்றில் தள்ளியதால், அந்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி சாமந்திகுப்பத்தைச் சேர்ந்தவர் இளைஞர் மவீன்.பெங்களூரில் வேலை பணிபுரியும் இவர் வார விடுமுறையை ஒட்டி ஊருக்கு வந்துள்ளார். விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் சுதர்சன், பவீத், ராகுல், கல்யாண குமார், அருண் குமார், அஜித் குமார் ஆகியோருடன் மது அருந்தியுள்ளார்.

மது அருந்தியதில் மவீனிற்கு போதை தலைக்கு ஏறிவிட அவனை நபர்கள் சேர்ந்து ஒரு கிணற்றில் தள்ளியுள்ளார். குளித்தால் போதை தெளிந்து விடும் என்ற நோக்கத்தோடு அவர்கள் விளையட்டாக செய்த விடயத்தால் போதையில் இருந்த மவீன் கிணற்றில் மூழ்கி உயிரிந்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தையும் மவீன் நண்பர் ஒருவரின் செல் போன் வீடியோவில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.