மற்ற கட்சி தலைவர்களை விட கமல் தான் அதிக சொத்து மதிப்பை காட்டியவர் – மற்றவர்கள் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?

0
794
ele
- Advertisement -

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெறும் முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கான இருக்கின்றனர். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கிய நிலையில் பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

-விளம்பரம்-
Image

தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் ஆயி அதிமுக கட்சியின் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், திமுகவின் கட்சி தலைவர் எம் கே ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் போன்ற பல்வேறு நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்கள். தேர்தல் ஆணையத்தின் வளை தளத்தில் இதுவரை 980 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

பொதுவாக வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து விவரகங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி. அந்த வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவங்கி உதயநிதி ஸ்டாலின் வரை யார் யார் எவ்வளவு சொத்துக்களை வைத்துள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளனர் என்பதை பார்க்கலாம். இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் நடிகர் கமல் தான் அதிக சொத்து மதிப்பை காட்டி இருக்கிறார்.

latest tamil news

தமிழக முதல்வர் எடப்பாடி அளித்துள்ள சொத்து விவரத்தில் அசையும் சொத்துக்கள் 47. 64 லட்சமும் அசையா சொத்துக்கள் 1.4 கோடிகளும் தன்னுடைய மனைவியார் பெயரில் அசையா சொத்துக்கள் 1.78 கோடி உள்ளதாக தெரிவித்திருக்கிறார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தன்னுடைய பெயரில் 61.19 லட்சம் அசையும் சொத்துக்களும் தன்னுடைய மனைவியார் பெயரில் 4.57 கோடி அசையும் சொத்துக்களும் 2.64 கோடி அசையா சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல் 45.09 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 131.84 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனக்கு கடனாக 50 கோடி ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரான டிடிவி தினகரன் தன்னுடைய பெயரில் 19 புள்ளி 18 லட்சம் அசையும் சொத்துக்களை ஐம்பத்தி 7.44 லட்சம் அசையா சொத்துக்களும் தன்னுடைய மனைவி யார் பெயரில் 7.67 கோடி அசையும் சொத்துக்களும் 2.43 கோடி அசையா சொத்துக்களும் இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், இவர் மீது 6 கிரிமினல் வழக்குகளும் இருக்கிறது. அதேபோல உதயநிதி ஸ்டாலின் மீது 22 வழக்குகளும் மு க ஸ்டாலின் மீது 47 வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement