அந்த 14 வயசு பொண்ணு ஏன் எதுவும் சொல்லல – டிக் டாக் பார்கவ் கைது விஷயத்தில் சின்மயி பதிலடி.

0
2420
chin

தமிழ் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகிகளில் சின்மையியும் ஒருவர். இவர் பாடிய பல்வேறு பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடைந்துள்ளது. அதிலும் இவர் வைரமுத்து வரிகளில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல்வேறு பாடல்களை பாடி இருக்கிறார். ஆனால் இவர் வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. இதனால் சின்மயிகும் வைரமுத்துவுக்கு ஒரு பணிப்போரே ஏற்பட்டது. அதே போல சின்மயிக்கு எதிராக பல்வேறு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது.

அதே போல வைரமுத்து சர்ச்சைக்கு பின்னர் சின்மயி, தனது சமூக வலைதளத்துள் பாலியல் தொல்லைகள் குறித்து தொடர்ந்து குரல் எழுப்பிக்கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் 14 வயது பெண்ணை கற்பழித்த வழக்கில் கைதான ‘Fun Bucket’ பிரபலம் பார்கவ் குறித்து சின்மயி பதிவு ஒன்றை போட்டுள்ளார். தெலுங்கில் ‘Fun Bucket’ என்ற பெயரால் ஆரம்பிக்கப்பட்ட டிக் டாக் வீடியோகள் பெரும் வைரலானது. அதிலும் அந்த டிக் டாக்கில் வரும் ‘ஓ மை காட், ஓ மை காட்’ என்ற வசனம் பெரும் பிரபலம் தான்.

- Advertisement -

இந்த ‘Fun Bucket’ சேனலில் பார்கவ் மற்றும் நித்யா என்றஇரண்டு நபர்கள் செய்த வீடியோக்கள் படு வைரலானது. இப்படி ஒரு நிலையில் இந்த சேனலின் ஒரு உரிமையாளரான பார்கவ், 14 வயது சிறுமையை பாலியல் கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இப்படி ஒரு நிலையில் சின்மயி, இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், உண்மையாக படித்த பெண்களை நினைத்து எனக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது பலரும் எனக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து ஏன் அந்த சிறுமி நான்கு மாதமாக கர்ப்பமாக இருப்பதை சொல்லவில்லை என்று கேட்கிறார்கள் இந்தியாவில் எத்தனை பேர் 14 வயது பெண்ணுக்கு செக்ஸ் கல்வி குறித்து சொல்லிக் கொடுக்கிறீர்கள். எத்தனை எத்தனை பேர் தங்களுடைய குழந்தைகளை பாலியல் கல்வி பையில அழைத்துச் செல்கிறீர்கள் என்று கேட்டால் ஒருத்தரிடமும் பதில் இல்லை என்று பதிவிட்டுள்ளார் சின்மயி.

-விளம்பரம்-
Advertisement