கடந்த சில நாட்களுக்கு வழக்கறிஞர்கள் தரப்பில், prank show என்று சொல்லக்கூடிய குறும்புத்தனமான வீடியோ எடுப்பதற்கான செயல்களால் தனி நபர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாக முறையிடப்பட்டது. ஒரு சிலர் இந்த நிகழ்வுகளால் அதிர்ச்சிக்குள்ளாகி உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனால் அதற்கும் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞ்சர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நீதிபதிகள் prank show எனப்படும் குறும்பு வீடியோக்களுக்கும், அதனை தொலைக்காட்சிகள் வெளியிடவும் தடை விதித்து உத்தரவிட்டனர் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில் பிராங்க் ஷோகளின் பலரது அபிமானமான fun Panrom நிகழ்ச்சி தொகுப்பாளர் சித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், பிராங்க் ஷோ செய்வதில் பல்வேறு ரிஸ்க் இருக்கிறது. நாங்கள் பெரும்பாலும் வெளியில்தான் படப்பிடிப்பினை நடத்துவோம் . சில சமயம் குப்பைத் தொட்டிக்கு பின்னர் கூட படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.
ஒருமுறை நாங்கள் ஒரு வெளிநாட்டு தம்பதியரை பிராங்க் செய்து கொண்டிருந்தோம். அப்போது அந்த தம்பதியினர் எங்களிடம் கோபப்பட்டு எங்களின் மெமரி கார்டை பிடுங்கிக் கொண்டனர். நாங்கள் பிராங்க் என்று சொல்லியும் அவர்கள் அதனை நம்பவில்லை. இறுதியில் எங்களை போலீஸ் பிடித்துவிட்டனர் என்று கூறியுள்ளார் சித்து