கஜாபுயலுக்கு மற்றவர்கள் கொடுத்தது நிதி..!ஜி வி பிரகாஷ் கொடுத்ததோ வாழ்வாதாரம்..!குவியும் பாராட்டு..!

0
230
g-v-prakash

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பின்னர் ஹீரோவாக நடித்து கலக்கி நடிகர் ஜி வி பிரகாஷ். இவரது படங்கள் என்றாலே இளசுகள் மத்தியில் ஒரு தனி வரவேற்பை பெற்று விடுகிறது. நடிப்பையும் தாண்டி இவர் பல சமூக அக்கறையான விடயங்களையும் செய்து வருகிறார்.

g v prakash

தமிழ் உணர்வு அதிகம் கொண்டுள்ளவராக இருக்கும் ஜி வி பிரகாஷ் ஜல்லிகட்டு விவகாரத்திலும் சரி, விவசாயிகள் பிரச்சனைகளிலும் சரி தன்னால் முடிந்த ஆதரவை தெரிவித்திருக்கிறார். தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரும் உதவியை
செய்துள்ளார் ஜி வீ.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கஜா புயலால் பெய்து வந்த கன மழையால் பல்வேறு சேதங்கள் உருவாகியது. புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளையும் உடமைகளையும் இழந்த மக்களுக்கு பல்வேறு தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும் உதவி செய்து வருகின்றனர்.

புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு பல்வேறு திரை கலைஞர்களும் நிதியுதவி அளித்து வரும் இந்நிலையில் தற்போது ஜி வி பிரகாஷ் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் 500 பசுக்களை அளித்து உதவி செய்துள்ளார்.