ஜி.வி. பிரகாஷின் திகில் பேண்டஸி பாணியில் வெளிவந்த ‘கிங்ஸ்டன்’ படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

0
268
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜி.வி பிரகாஷ். தற்போது இவருடைய 25 படமாக கிங்ஸ்டன் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கமல் பிரகாஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஜி.வி பிரகாஷ் தான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். திகில் கலந்த ஃபேண்டஸி பாணியில் உருவாகியிருக்கும் கிங்ஸ்டன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் தூவத்தூரில் கடல் கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கப் போனாளே இறந்து பிணமாக தான் திரும்பி வருகிறார்கள். தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்து கொண்டே இருப்பதால் அந்த கிராமத்தில் உள்ள எல்லோருமே மீன்பிடிக்க செல்ல பயப்படுகிறார்கள். இந்த சம்பவம் 1982ல் நடக்கிறது. இதனால் அரசாங்கம் கடலுக்குள் இனி யாரும் மீன் பிடிக்கப் போகக்கூடாது என்று உத்தரவும் போடுகிறது.
அதோடு இந்த சம்பவத்திற்கு காரணம் கடலில் அடக்கம் செய்யப்படும் ஆன்மாக்களின் வேலை தான் என்று கிராம மக்களும் பயப்படுகிறார்கள்.

- Advertisement -

பல ஆண்டுகள் இப்படியே நடப்பதால் கடலுக்குள் செல்ல மக்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் தான் கதாநாயகன் ஜி.வி பிரகாஷ் என்ட்ரி கொடுக்கிறார். பணத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து வாழுகிறார் ஜி.வி பிரகாஷ். பணத்தை எப்படியாவது சேர்த்து ஒரு போர்ட் வாங்க வேண்டும் தான் இவருடைய லட்சியமே. இதனால் இவர் கடலுக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார். இதற்காக இவர் தாமஸ் என்பவரிடமும் வேலை செய்கிறார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய முதலாளி போதைப்பொருள் கடத்துகிறார் என்று தெரிந்து கொண்டு ஜி.வி பிரகாஷ் அவரிடம் இருந்து விலகுகிறார். அதற்குப்பின் ஜிவி பிரகாஷ் துணிச்சலாக கடலுக்கு செல்கிறார். கடலுக்கு போனால் உயிருடன் மீண்டும் திரும்ப முடியாது என தெரிந்தோமே தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஜி.வி பிரகாஷ் கடலுக்கு செல்கிறார். மக்கள் சொல்லும் கதை உண்மை இல்லை என்று நிரூபிக்கவும் நினைக்கிறார்.

-விளம்பரம்-

கடைசியில் கடலுக்கு சென்ற ஜி.வி பிரகாஷ் திரும்பி வந்தாரா? கடலுக்குள் என்ன நடக்கிறது? மக்கள் நம்புவது போல் ஆன்மாக்களின் வேலையா? இல்லையா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.
கமல் பிரகாஷ் அறிமுக இயக்குனராக இருந்தாலுமே கதைக்களத்தை அருமையாக எடுத்திருக்கிறார்.
ஆனால், கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் சுவாரசியம், விறுவிறுப்பையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கதாநாயகன் ஜி.வி பிரகாஷ் தனக்கு கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார்.

படத்திற்கு பக்க பலமே ஜிவி பிரகாஷின் நடிப்பு என்றே சொல்லலாம். இவரை அடுத்து படத்தில் வரும் அனைத்து நடிகர்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கடலில் வரும் காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால், திரைக்கதை கொண்டு செல்ல விதத்தில் தான் இயக்குனர் ஏமாற்றி இருக்கிறார். முதல் பாதி சுவாரசியமே இல்லாமல் செல்கிறது. இரண்டாம் பாதி தான் கொஞ்சம் சுமாராக இருக்கிறது. பொதுவாகவே பேண்டஸில் கதைகளில் லாஜிக் மீறல்கள் இருக்கும். இருந்தாலும் பார்வையாளர்கள் ரசிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும்.

இந்த படத்தில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களின் பொறுமையை சோதிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. குறிப்பாக, கடலில் வந்த ஆவிகளை கட்டி வைத்து அடிப்பது கொஞ்சம் ஓவர் தான். எடிட்டிங்கில் இயக்குனர் சொதப்பி இருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை ஓகே. ஒளிப்பதிவு, கலை இயக்கம் படத்திற்கு பக்க பலத்தை கொடுத்திருக்கிறது. மொத்தத்தில் சொல்ல வந்த விஷயத்தை தெளிவாக காண்பித்திருந்தாலே படம் ரசிக்கும் வகையில் இருந்து இருக்கும்.

நிறை:

ஜி.வி பிரகாஷ் நடிப்பு

கதைக்களம்

ஒளிப்பதிவு, பின்னணி இசை ஓகே

இரண்டாம் பாதி சுமார்

குறை:

கதைக்களம் கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை காண்பித்திருக்கலாம்.

முதல் பாதி ரொம்ப பொறுமையாக செல்கிறது

எடிட்டிங்கில் கவனம் செலுத்தி இருக்கலாம்

நிறைய லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் கிங்ஸ்டன் – உச்சத்தை தவற விட்டான்

Advertisement