பிக் பாஸ் வீட்ல இருந்து வந்ததும் தலைமறைவாக போகிறாராம் கணேஷ்

0
4678
123
- Advertisement -

“கணேஷ் அமைதியானவர் என்பதால், எப்படியும் நூறு நாள் அந்த வீட்டில் இருப்பார்னு நான் நம்பினேன். இதோ, முக்கால்வாசி நாள்களை கடந்துட்டார். ஆனால், அவரைப் பிரிஞ்சு இருக்கும் இந்த ஒவ்வொரு நாளும் சீக்கிரம் முடியணும்னு எதிர்பார்த்து காத்திருக்கேன்” என நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் நடிகை நிஷா. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போட்டியாளராக இருக்கும் கணேஷ் வெங்கட்ராமன் மனைவி. கணவரின் பிரிவு தருணங்கள் பற்றி முதல்முறையாகத் தந்திருக்கும் பேட்டி இது.

-விளம்பரம்-

125

- Advertisement -

“கணேஷைப் பிரிஞ்சு சில நாள்கூட இருந்ததில்லை. நூறு நாள்கள் எப்படி இருக்கப்போறேனோனு ஆரம்பத்தில் ரொம்ப எமோஷனலா இருந்தேன். அவரைத் தினமும் டிவியில் பார்த்துட்டிருந்தாலும் ஒரு வெறுமையை உணர்ந்துட்டிருக்கேன். ‘வெறும் நூறு நாளைக்கு இப்படி ஃபீல் பண்றியே’னு பலரும் சொல்றாங்க.

எங்களுக்குள்ளான அன்பும் பரிமாற்றமும் அந்த அளவுக்கு நெருக்கமானது. ஏ டு இசட் விஷயங்களைத் தினமும் ஷேர் பண்ணிப்போம். ஒருத்தரின் எந்த ஒரு விஷயத்தையும் டிஸ்கஸ் பண்ணிட்டுதான் கமிட் ஆவோம். ஒவ்வொரு நாளும் அந்த நாள் முழுக்க நாங்க செய்யவேண்டிய வேலைகளைத் திட்டமிடுவோம். அன்றைக்குத் தூங்க போகிறப்போ நாம பிளான் பண்ணின விஷயங்களைச் சரியா முடிச்சோமானு பேசுவோம். இப்படி ஃப்ரெண்ட்ஷிப்பாக இருக்கிற எங்க ஃபீலிங்ஸை மத்தவங்க புரிஞ்சுக்கிறது கஷ்டம்தான்.

-விளம்பரம்-

nisha5

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஹரிதுவார், ரிஷிகேஷ் என நான் ஷூட்டிங் போன இடங்களில் அவர் பிரிவை மறக்க தனியா சுத்திட்டிருப்பேன். கொஞ்ச நாளைக்கு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்க்காமல், என்னை கன்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். நான் நடிச்சுட்டிருக்கும் ‘தலையணைப் பூக்கள்’ சீரியலில் சில மாதங்களாக எமோஷன் சீன்ஸ் அதிகம்.

கணேஷைப் பிரிஞ்சு இருக்கிற ஃபீலிங்ஸ்ல, கிளிசரினே இல்லாமல் நடிச்சுட்டிருந்தேன். ஷூட்டிங் ஸ்பார்டுல ஷாட் இல்லாத நேரத்தில், யார்கிட்டயும் சரியாப் பேசாமல், பாட்டு கேட்டுட்டிருந்தேன். எனக்கு மாமனாராக நடிக்கும் டெல்லி குமார் அப்பாகிட்ட மட்டும் என் ஃபீலிங்ஸை ஷேர் பண்ணிக்குவேன். அவர்தான் எனக்கு நிறைய புக்ஸ் கொடுத்துப் படிக்கச் சொன்னார். என் கவலைகளைச் சொல்லி இன்னும் எமோஷனல் ஆகிடக்கூடாதுனுதான் இத்தனை நாளாக மீடியாவுக்கும் பேட்டி கொடுக்கலை. ஆனால், நேற்று முன்தினம் அவரைச் சந்திச்சுட்டு வந்ததும், ஓரளவுக்கு கான்ஃபிடென்டா இருக்கேன்” எனச் சிரிக்கிறார் நிஷா.

nishar

‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் கணவரைச் சந்தித்துப் பேசிய தருணத்தைப் பகிரும்போது அவர் முகம் பூவாக மலர்கிறது. “புதன்கிழமை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள் என் கண்களைக் கட்டி கூட்டிட்டுப்போனாங்க. ஷூட்டுக்காக வெளியூர் போயிருந்ததாலும், அவரை மீட் பண்ண உடனே சென்னைக்கு வந்ததாலும் முந்தின நாள் நிகழ்ச்சியைப் பார்க்க மிஸ் பண்ணிட்டேன். அதனால், முந்தின நாள் டாஸ்கில் அவர் கண்கள் இன்ஃபெக்‌ஷன் ஆனது எனக்குத் தெரியாது. அங்கே போய்ப் பார்த்ததும் துடிச்சுப்போயிட்டேன்.

ganesh15

73 நாள்கள் கழிச்சு அவரைச் சந்திக்கிறதால் பெரிய எக்ஸைட்மென்ட். அவரைப் பார்த்ததும் அழுதிடக்கூடாது. அப்படி அழுதால், அவரும் ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவார்னு என்னை ரொம்பவே கன்ட்ரோல் பண்ணிட்டுதான் உள்ளே போனேன். கண் இன்ஃபெக்‌ஷனால் கணேஷ் டயர்டா இருந்தவர், என்னைப் பார்த்ததும் பயங்கர சந்தோஷமாகிட்டார். ‘ரொம்ப நேரமா கண்ணைத் திறக்காமல் இருந்தவர், வைஃப் வந்ததும் கண்ணைத் திறந்து சிரிக்கிறார். நீங்க வந்தது நல்லதாப் போச்சு’னு மற்ற போட்டியாளர்கள் சொன்னாங்க. அவரோடு தனியாகப் பேசினது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. டான்ஸ், அரட்டைனு கலகலப்பா இருந்துச்சு” என்கிறார்.

ganesh1

சரி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராமின் செயல்பாடுகள் பற்றி உங்களின் கருத்து என்ன?

“அவர் ரொம்ப அமைதியான, கோபப்பட்டாத, மத்தவங்களுக்குத் தொந்தரவு கொடுக்காத டைப். ஒருத்தர்கிட்ட இருக்கிற பாசிட்டிவ் விஷயங்களைதான் விரும்புவார். எங்க வீட்டில் யாராச்சும் தப்பு செஞ்சா, அதை மனம் புண்படாத வகையில் சொல்லி, சரிசெய்வார். நாங்க ரெண்டு பேரும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கின சமயத்தில், என் பாசிட்டிவ் மற்றும் சரிசெய்துக்க வேண்டிய விஷயங்களை விரிவா எஸ்.எம்.எஸ் மூலம் சொல்வார். அதைச் சரிசெய்துகிட்டு, அடுத்தடுத்த நிகழ்ச்சிகளைச் செய்வேன். இப்படித் தன்னோடு பயணிக்கிறவங்க மேல அவர் காட்டும் அக்கறையைப் பார்த்துதான் அவர்மீது எனக்குக் காதல் வந்துச்சு. அவர் என் லைஃப் பார்ட்னரா வந்த பிறகு, என் லைஃப் ரொம்பவே அர்த்தமானதாக போயிட்டிருக்கு.

NTLRG_

இப்படி அமைதியா இருந்தவரையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஃப்ளேம் பண்ணினாங்க. தன் மேல் சொல்லப்படும் குற்றச்சாட்டுகளைச் சரிசெய்துக்கிட்டாரே தவிர, யார் மேலயும் கோபப்படலை. வெளிச் சமூகத்துலயே ஒருத்தரை பலர் சேர்ந்து ப்ளேம் பண்றது சாதாரண நடக்குது. நூறு நாள்கள் ஒரு வீட்டுக்குள் அடைச்சுவெச்சிருந்தா, ஒவ்வொருத்தரின் குணமும் மாறுவது சகஜம்தானே. அதனால், அதை நான் தப்பாவே நினைக்கலை. இது ஒரு கேம். அதைத் தாண்டி, நம்மகிட்ட இருக்கிற தவறுகளைத் தெரிஞ்சுகிட்டு சரிசெய்துக்க முடியுது. அதுதான் இந்த நிகழ்ச்சி மூலமாக நாம கத்துக்க வேண்டிய பாடம். அந்தப் பாடத்தை கணேஷ் நல்லாவே படிச்சுட்டிருகார்.

tamildsf

ஆடியன்ஸா நானும் படிச்சுட்டிருகேன். சாப்பிடுகிற விஷயத்தில்தான் அவர் மேலே குற்றச்சாட்டு சொல்லப்படுது. தன் உடலுக்கு என்ன தேவையோ, அதில் கவனம் செலுத்தி சாப்பிடுறாரு. உடற்பயிற்சி செய்றாரு. சின்ன வயசிலிருந்து அவர் வளர்ந்த சூழல் அப்படி. அது மற்ற போட்டியாளர்களுக்குச் சரியாகப் புரியலை. அதைப் புரிஞ்சுகிட்டா, பாராட்ட ஆரம்பிச்சுடுவாங்க. நான் இந்தி பிக் பாஸூம் பார்த்திருக்கேன்.

jyyi

தமிழ் பிக் பாஸ்ல மட்டும்தான் என்னதான் பலவித எதிர் கருத்துகள், கோபங்கள் இருந்தாலும் சக போட்டியாளர்கள் எல்லோரும் ஃபேமிலி பாண்டிங்ல பழகுறாங்க. இந்த ரிலேஷன்ஷிஃப் கிடைக்கிறது நல்ல விஷயம். இந்த 74 நாள்கள் நடந்த நிகழ்வுகளைப் பார்த்திருப்பீங்க. ஒவ்வொரு போட்டியாளரும் பல ரூபங்களைக் காட்டினாங்க. ஆனால், கணேஷ் முதல் நாளிலிருந்து இப்போ வரை எப்படி இருக்கிறார்னு ஆடியன்ஸே ஜட்ஜ் பண்ணிக்கோங்க. தட்ஸ் ஆல்” என்கிற நிஷா, தொடர்ந்து சில விஷயங்களைப் பகிர்கிறார்.

“அவருக்கு தினமும் டைரி எழுதும் பழக்கம் உண்டு. அவருக்காக ‘ஹண்ட்ரர்டு டேஸ் வித் அவுட் யூ’ என அவரைப் பிரிஞ்சிருக்கும் ஒவ்வொரு நாள் நிகழ்வுகளையும் எழுதிட்டிருக்கேன். அவருக்காக வீடியோவும் தயார் பண்ணிட்டிருக்கேன். இதையெல்லாம் அவருக்கு நான் கொடுக்கப்போகும் சர்ஃப்ரைஸ் கிஃப்ட். தவிர, நிறைய சென்டிமென்ட் சர்ப்ரைஸூம் அவருக்குக் காத்திட்டிருக்குது. அது என்னன்னு அடிச்சுக்கேட்டாலும் இப்போ சொல்ல மாட்டேன். மும்பையில் வசிக்கும் கணேஷூன் அம்மா ராதிகா வெங்கட்ராமன் எனக்கு அம்மா மற்றும் பெஸ்ட் ஃப்ரெண்ட் மாதிரி.

hgfhtt

தினமும் அவங்களோடு ‘பிக் பாஸ்’ பற்றியும் அவரைப் பற்றியும் பேசிட்டே இருப்போம். அது எனக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கும். இன்னும் கொஞ்ச நாள்தானே. இந்த இடைவெளியும், பிரிவும் எங்க காதலை இன்னும் அதிகப்படுத்துது. பொதுவா, நாங்க அடிக்கடி வெளியூருக்குப் போவோம். ஒரு மாசத்துக்கு முன்னாடி வந்த என் பிறந்த நாளுக்காக இமாலயாவுக்குப் போக பிளான் பண்ணியிருந்தோம். கணேஷ் ‘பிக் பாஸ்’ போட்டியில் கலந்துகிட்டதால் மிஸ் ஆகிருச்சு. அந்த நாளில் பிக் பாஸ் வீட்டிலேயே அவர் கேக் வெட்டி கொண்டாடினது எனக்கு நெகிழ்ச்சியா இருந்துச்சு. அவர் வெளியே வந்ததும் ரெண்டுப் பேரும் மூணு மாசத்துக்கு தலைமறைவாகிடுவோம். செம ஜாலியா ஊர் சுத்தி, எங்க ஃபீலிங்ஸை ஷேர் பண்ணிப்போம்” எனப் புன்னகைக்கிறார் நிஷா.

Advertisement