எச்சக்களை, வதாரணியின் கையெழுத்தை போட்டு மோசடி – இசையமைப்பாளர் தீனாவை கிழித்த கங்கை அமரன்.

0
166
- Advertisement -

பவதாரணியின் கையெழுத்தை போட்டு இசையமைப்பாளர் தீனா பணமோசடி செய்திருப்பதாக கங்கை அமரன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரைப்பட இசை கலைஞர்கள் சங்க தேர்தல் இன்று நடைபெற இருக்கிறது. இதனால் கங்கை அமரன் மற்றும் சக இசையமைப்பாளர்கள் சென்னையில் வடபழனியில் உள்ள திரைப்பட இசை கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் ஒன்று திரண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இதனை அடுத்து இவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள். அப்போது பேட்டியில் கங்கை அமரன், எங்கள் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அது உங்கள் எல்லோருக்கும் தெரியும். நியாயமாக பார்த்தால் நான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இளையராஜா இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கு பதில் நான் பேச வந்திருக்கிறேன். அதில் எனக்கு பெருமை தான். திரைப்பட உலகில் தொழிலாளர்களுக்காக தொடங்கிய முதல் சங்கமே இசை கலைஞர் சங்கம் தான்.

- Advertisement -

கங்கை அமரன் பேட்டி:

இதை தொடர்ந்து தான் மற்ற யூனியன்கள் எல்லாம் வந்தது. ஆனால், அந்த காலத்தில் தின சம்பளம் எல்லாம் கிடையாது. இசை கலைஞர்கள் சங்கத்திலிருந்த பெரியவர்கள் தான் போராடி இதை வாங்கித் தந்தார்கள். அவர்களுடைய கருணையால்தான் நாங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறோம். இந்த யூனியனை காப்பாற்ற வேண்டியது எங்களுடைய பொறுப்பு. அதனால்தான் அத்தனை பேரும் இங்கு வந்திருக்கிறோம். இந்த சங்கத்தை தொடர்ந்து ஆண்டவர்கள் யாருமே இல்லை. ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் பதவி கிடைக்கும். அதை நீடித்துக் கொள்ளலாம்.

இசையமைப்பாளர் சங்க தேர்தல் குறித்து சொன்னது:

மேலும், சங்கவிதிகளின்படி ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் தான் பதவி. ஏற்கனவே நடந்த தேர்தலில் தீனா தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி நான்கு ஆண்டுகள் தலைவராக இருந்தார். இதற்குப் பிறகும் நாம்தான் ஆளப்போகிறோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். ஒருவரை தலைவராக இருப்பதை விட அனைவரும் தலைவர்களாக இருந்து அவர்களின் அனுபவத்தையும் உழைப்பையும் இந்த சங்கம் பெற வேண்டும் என்பது தான் இளையராஜா போன்றவர்களுடைய கருத்து.

-விளம்பரம்-

பவதாரணி கையெழுத்து மோசடி:

இந்த யூனியலில் நடக்க கூடாத பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா காலத்தில் பணம் வேண்டும் என்று பலர் கையெழுத்து போட்டதாக சில ஆவணங்கள் இருக்கிறது. இறந்த பவதாரணையின் கையெழுத்தை கூட போட்டு பணத்தை எடுத்து இருக்கிறார்கள். சுமார் 80 லட்சத்திற்கும் மேல் பணத்தை திருடி இருக்கிறார்கள். எங்கே தேர்தலில் புதிய தலைவர் வந்துவிட்டால் தாம் பிரச்சனையில் மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் தான் மீண்டும் தலைவராக வேண்டும் என்று தீனா நினைக்கிறார். நாங்கள் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

தீனா குறித்து சொன்னது:

தீனா நீங்கள் செய்வது ரொம்ப தவறு. ஒருவர் நான்கு ஆண்டுகள் தான் தலைவராக இருக்க வேண்டும் என்று இளையராஜா சொல்லியும், அவர் அப்படித்தான் சும்மா ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார் என்று இளையராஜாவை தூக்கி எறிந்து பேசி இருக்கிறார். அப்படிப்பட்ட ஆள் எங்களுக்கு தலைவராக தேவையில்லை. எங்களை எல்லாம் வளர்த்து விட்டவர் இளையராஜா தான். ஆனால், அவர் என்ன சொல்வது நாம் என்ன கேட்பது என்று தீனா நினைக்கிறார். இந்த செயலை நான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடம் சொன்னேன். காரணம், தீனா பாஜக உறுப்பினராகவும் பாஜகவின் தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவராகவும் இருக்கிறார். சங்க தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று சொல்லியும் தீனா மீறி போட்டியிடுகிறார். நீதிமன்றத்தில் முறையிட்டோம். அதுவும் வேற மாதிரி போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.

Advertisement