ஸ்பார்க் பாட்டை ரெக்கார்ட் பண்ணும்போதே விஜய் இத சொன்னார்- நெகிழ்ச்சியில் கங்கை அமரன்

0
341
- Advertisement -

ஸ்பார்க் பாடல் குறித்து கங்கை அமரன் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த சில வாரங்களாகவே விஜய்யின் கோட் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், கடந்த ஏப்ரல் 14-ம் தேதி கோட் படத்தினுடைய முதல் பாடலான ‘விசில் போடு’ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து நடிகர் விஜய்யின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘கோட்’ படத்திலிருந்து ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை விஜய் பாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த பாடலில் மறைந்த பாடகி பவதாரணி குரலும் வந்திருக்கிறது. இவரின் குரலை ஏஐ மூலம் மறு உருவாக்கம் செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

கோட் படம்:

இதை அடுத்து சமீபத்தில் தான் கோட் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி இருக்கிறது. இப்பாடலுக்கு ‘ஸ்பார்க்’ என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் விருஷா பாலு இணைந்து பாடி இருக்கிறார்கள். இந்த பாடலிற்கு கங்கை அமரன் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார். மேலும், இந்த பாடலில் விஜய், இளமை தோற்றத்தில் ஸ்டைலாக இருக்கிறார். மிகவும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்த பாடல் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

மூன்றாவது பாடல்:

இந்நிலையில் இந்த பாடல் தொடர்பாக கங்கை அமரன் பேட்டியில், ஸ்பார்க் பாடலை எல்லோருமே கொண்டாடுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதி இருக்கிறேன். அதில் இந்த பாடலும் ஒன்று. அதோட விஜய் என்ற பெரிய ஹீரோவுக்கு நான் முதன் முதலாக எழுதிய பாடல் இது தான். விஜய் எனக்கு ஒரு மகன் மாதிரி. இந்த பாட்டு எழுதினதை நான் மறந்தே விட்டேன். காரணம், பாட்டு ரெக்கார்ட் பண்ணி ரொம்ப நாள் ஆனது. ரிலீஸான பிறகு இப்போது தான் திரும்பி கேட்டேன். ரொம்ப சூப்பராக இருக்கு.

-விளம்பரம்-

கங்கை அமரன் பேட்டி:

ரைமிங் வார்த்தைகள் எல்லாம் கரெக்டா இருக்கு. பாட்டு ரெக்கார்ட் பண்ணும் போதே பாட்டு நல்லா இருக்கு என்று விஜய் சொன்னார். மேலும், இந்தப் பாடல் எழுதும் வாய்ப்பு வந்தபோது எனக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் இந்த ஒரே ஒரு பாட்டு போதும் மீதியை மற்றவர்களை வைத்து எழுதிக் கொள் என்று சொல்லிவிட்டேன். அதற்குப் பிறகு தான் வைரமுத்து மகன்கள் எழுதினார்கள். அதே மாதிரி 2கே கிட்ஸ் மையப்படுத்தி இந்த பாடல் எழுதவில்லை.

பாடல் குறித்து சொன்னது:

யுவன் பாடலுக்கான சூழலை சொல்லி இப்படி வேண்டும், அப்படி வேணும் என்று பாடல் வரிகள் கேட்டார்கள். பின் டியூனை அனுப்பி அதுக்கேத்த மாதிரி வரிகள் வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு பின் பத்து நிமிடத்தில் எழுதி அனுப்பி விட்டேன். பொதுவாகவே நான் 10,15 நிமிடத்திலேயே பாடல்களை எழுதி விடுவேன். என்னுடைய எல்லா பாடல்களும் அப்படித்தான் உருவானது. எனக்கு எப்படி படம் இயக்க வருதோ, இசையமைக்க வருதோ அப்படித்தான் பாட்டு எழுதுவதும். இது என்னோட ரசிகர்களுக்காக எழுதுவது தான் தவிர எங்களுக்காக எழுதுவது கிடையாது. நாம் எழுதுவதை மக்கள் கொண்டாடுவது சந்தோஷம் தான் என்று கூறியிருக்கிறார்.

Advertisement