‘ஏய்’ உன்னைத்தானே, ‘ஏய்’ இந்தாடி கப்பக்கிழங்கே – கங்கை அமரன் சொன்ன ஒற்றை சொல்லை வைத்து இத்தனை பாடல்களா (முடியலடா சாமி)

0
711
gangaiamaran
- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கை அமரன் பேட்டி எடுத்த தொகுப்பாளரை ஒருமையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் கங்கை அமரனின் அந்த வீடியோவை வைத்து பல விதமான Trollகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையின் ஜாம்பவனக பல ஆண்டுகளாக கொடிகட்டி பறந்து வருபவர் இளையராஜா. இசையின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட இவர் பல விருதுகளையும் அள்ளிக்குவித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது.இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறி இருந்தது,பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது.

- Advertisement -

அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட இளையராஜா :

இந்தியாவின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.குறிப்பாக முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார்.அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள்.

கருத்தில் உறுதியாக இருந்த இளையராஜா :

இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருந்தார். பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா தனது சகோதரர் கங்கை அமரனிடம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் மோடி குறித்து இளையராஜா பேசியது பற்றி அவருக்கே போன் செய்து கேட்டேன்.

-விளம்பரம்-

இளையராஜாவுடன் மீண்டும் சேர்ந்த கங்கை அமரன் :

உங்களை நிறைய பேர் விமர்சிக்கிறார்களே என்று நேற்று இளையராஜாவிடம் கேட்டேன்.அதற்கு பிரதமர் மோடி குறித்து எழுதிய கருத்தை திரும்ப பெற மாட்டேன் என்று இளையராஜா என்னிடம் சொன்னார். அது தன்னுடைய சொந்த கருத்து என்றார். அதே சமயம் தன்னுடைய கருத்து பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்தை விமர்சிக்கவும் மாட்டேன் என்று என்னிடம் கூறினார் என்று கங்கை அமரன் கூறி இருந்தார். கங்கை அமரன் Bjpயில் பல ஆண்டுகளுக்கு முன்பே இணைந்தார்.அதே போல கடந்த சில வருடங்களாக இளையராஜாவுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருந்தார்.

ஒருமையில் பேசிய கங்கை அமரன் :

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கங்கையமரனிடம், இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது குறித்து கேட்கப்பட்ட போது ஆவேசம் அடைந்த கங்கையமரன் ‘மோடி குறித்து இளையராஜா எழுதிய முன்னுரையை நான் எழுதினேன்னு சொல்றவன் முட்டாள், அறிவில்லாத நாய்’ என்று கூறியுள்ளார். மேலும், இந்த பேட்டியில் ஆங்கரை ஏய், வாயா, போயா என்று கங்கை அமரன் பேசியதை கண்டு நெட்டிசன்கள் பலரும் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement