கவுண்டமணியால் நான் நிறைய பணம், மன வேதனையை சந்தித்து இருக்கிறேன் என்று கங்கை அமரன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இசையமைப்பாளராகவும், பாடகராகவும், திரைக்கதை ஆசிரியராகவும், நடிகராகவும், இயக்குனராகவும் என பன்முகம் கொண்டு வலம் வருபவர் கங்கை அமரன். இவர் தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை அமரன் 1979 ஆம் ஆண்டு வெளியான கரைகடந்த குறத்தி என்ற படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் கடைசியாக 2010 ஆம் ஆண்டு வெளிவந்த புகைப்படம் என்ற படத்தில் இசையமைத்திருந்தார். மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். பிரபு சுரேஷ் நடித்த கோழி கூவுது என்ற படத்தில் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

Advertisement

கங்கை அமரன் குறித்த தகவல்:

அதை தொடங்கி இவர் 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கிறார். குறிப்பாக, இவர் இயக்கிய கரகாட்டம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் கவுண்டமணி குறித்து கங்கை அமரன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நான் நிறைய படங்களுக்கு ரீ’ரெக்கார்டிங் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு பாடல் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். கம்போஸ் செய்யலாம் என்ற ஆசை எனக்கு இல்லை. மலேசியா வாசுதேவன் தான் என்னை இசையமைப்பாளர் ஆக்கினார்.

கங்கை அமரன் அளித்த பேட்டி:

மேலும், பணம் விஷயத்தில் கவுண்டமணி சரியாக இருப்பார். கோயில் காளை என்று ஒரு படம் எடுத்தோம். அது என்னுடைய சொந்த படம். ஒருத்தரின் சொந்தப் படம் என்றால் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் குறைந்த சம்பளம் தான் வாங்குவார்கள். ஆனால், என்னுடைய சொந்த படத்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலரும் நிறைய சம்பளம் கேட்டார்கள். விஜயகாந்த் மட்டுமே சம்பளம் பேசவில்லை. அந்த நேரத்தில் ராஜாதி ராஜா, கோயில் காளை ஆகிய இரண்டு படமும் செய்தேன். பயங்கர பண பிரச்சினை ஏற்பட்டது.

Advertisement

கவுண்டமணி செய்த காரியம்:

அதேபோல் எத்தனையோ படங்களில் கவுண்டமணி வந்ததுக்கு காரணம் நான் தான். ஆனால், அந்த கோயில் காளை படத்தில் பாக்கி செட்டில் பண்ணினால் தான் டப்பிங் வருவேன் என்று கரராக பேசினார். நேரிடையாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும் மேனேஜரிடம் சொல்லி அனுப்பி இருந்தார். எனக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு உதவி செய்திருக்கும் இப்படி சொல்றாரே, படத்தை வித்து தானே காசு கொடுக்கணும் என்றெல்லாம் வேதனைப்பட்டேன்.

Advertisement

விஜயகாந்த் குறித்து சொன்னது:

அதற்குப்பின் பணம் ரெடி பண்ணி கொடுத்த பிறகு தான் கவுண்டமணி டப்பிங் வந்தார். ஆனால், எனக்கு அவர் முகத்தை பார்க்க பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு கஷ்டமாக இருந்தது. ஆனால், விஜயகாந்த் ஜென்டில்மேன். என்னுடைய கஷ்டம் உணர்ந்து அண்ணா போய் ரெஸ்ட் எடுங்க. நான் பார்த்துகிறேன் என்று அனுப்பிவிட்டார். அவருக்கு என் சிரமங்கள் அனைத்துமே புரிந்தது. கோயில் காளை தான் எனக்கு பெரிய உளைச்சலை ஏற்படுத்திய படம் என்று கூறி இருக்கிறார்.

Advertisement