புஷ்பா படம் பார்த்த உத்வேகத்தில் கொடூர கொலை சம்பவம். சீரழிந்த சிறுவர்கள். காரணத்தை கேட்டால் ஷாக்காவீங்க.

0
511
Pushpa
- Advertisement -

புஷ்பா படம் பார்த்த வேகத்தில் சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஸ்பா. இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் படத்தில் பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆந்திர பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் பாடலை எல்லோரும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

டெல்லியை சேர்ந்த இளைஞன்:

இந்நிலையில் இந்த படத்தை பார்த்து அதில் இருக்கும் கொலை சம்பவத்தை மையமாக வைத்து மூன்று சிறுவர்கள் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியின் ஜஹாங்கிர்புரி பகுதியை சேர்ந்த இளைஞர் சிபு. இவருக்கு 24 வயது ஆகிறது. சிபு அதே பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த புதன்கிழமை இரவு வேலை முடிந்து சிபு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கொடூரமாக கொலை செய்த சிறுவர்கள்:

அப்போது சிபியை வழிமறித்த மூன்று சிறுவர்கள் கத்தியை எடுத்து சிபுவை சரமாரியாக வெட்டியுள்ளனர். சிபு கத்தியால் வெட்டப்பட்டதை ஒரு சிறுவன் வீடியோ எடுத்துள்ளார். பின் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் அந்த இளைஞன் இருந்தார். பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும் சிகிச்சை பலனின்றி சிபு உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

-விளம்பரம்-

போலீஸ் வலை வீச்சு:

அப்போது டெல்லி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது கத்தியால் குத்தும் காட்சியை சிறுவன் ஒருவன் வீடியோ எடுக்கும் காட்சி பதிவாகி இருப்பது தெரிந்தது. அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த சிறுவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்திருக்கின்றனர். மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, சமீபத்தில் வெளியான புஷ்பா, Bhaukaal படம் போன்ற கேங்ஸ்டர் படங்களை பார்த்த சிறுவர்கள் திரைப்படத்தில் வருவது போல கொலை செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட தான் இந்த கொலையை செய்தார்கள் என்பது தெரிய வந்தது.

கொலை செய்த காரணம்:

அதுமட்டுமில்லாமல் சிறுவர்களிடம் இருந்த கொலையை வீடியோ எடுத்த மொபைல் போனையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். போலீசார் விரைந்து மூவரையும் பிடித்து வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது தடுக்கப்பட்டது. இப்படி படத்தை பார்த்து அநியாயமாக மூன்று சிறுவர்கள் ஒருவரை கொலை செய்துள்ள சம்பவம் போலீசாருக்கு மட்டுமில்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement