விவசாய நில சர்ச்சை, பல கோடி மதிப்பு, 6 வங்கி கணக்கு முடுக்கம் – 6 ஆண்டுக்கு பின் சிக்கலில் சிக்கிய கெளதமி.

0
450
gautami
- Advertisement -

விவசாய நிலம் சர்ச்சை காரணமாக ஆறு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும், வங்கி கணக்கு முடக்கம் நீக்க வேண்டும் என்றும் நடிகை கௌதமி மனு தாக்கல் செய்து இருந்த வழக்கிற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் கௌதமி. இவர் தமிழில் கடந்த 1988ஆம் ஆண்டு ரஜினியின் குருசிஷ்யன் என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதற்கு அடுத்த வருடம் கமலுடன் அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென முத்திரையை பதித்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழில் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் டிவி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர் போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதோடு நோய் விழிப்புணர்வு பேரணியையும் நடத்தி வருகிறார். தற்போது பி.ஜே.பி-யில் பிஸியாக இருக்கும் தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசனுக்கு முன்னரே பி.ஜே.பி கட்சியின் அகில இந்திய இளைஞர் அணி செயலாளராக பதவி வகித்தவர் கெளதமி. நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கௌதமி பி.ஜே.பிக்காக பயங்கரமாக உழைத்தார்.

- Advertisement -

கௌதமியின் தனிப்பட்ட வாழ்கை:

இதனிடையே இவர் 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்ற தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் 1999ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று விட்டனர். இந்த தம்பதியருக்கு சுப்புலட்சுமி என்ற ஒரு மகள் இருக்கிறார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு முதல் கௌதமி தனது நண்பர் கமலுடன் காதல் ஏற்பட்டு இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஓரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுக்கு முன் பிரிந்து விட்டனர்.

கௌதமிக்கு ஏற்பட்ட சட்ட சிக்கல்:

இதற்கு காரணம் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. தனது மகளின் எதிர்கால வாழ்க்கை குறித்து அக்கரை கொண்டு இந்த முடிவை எடுத்ததாக கவுதமி கூறினார். தற்போது கௌதமி அவரது மகள் சுப்புலட்சுமியுடன் இருக்கிறார். இந்த நிலையில் கௌதமி ஒரு சட்ட சிக்கலில் சிக்கி உள்ள சம்பவம் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், கௌதமி அவர்கள் விவசாய நிலத்தை விற்ற பிரச்சினையில் சிக்கி இருக்கிறார். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை கௌதமி மனு தாக்கல் செய்திருக்கிறார். அதில் அவர்,

-விளம்பரம்-

கௌதமி மனுவில் கூறியது:

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் என்ற பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு 4.10 கோடிக்கு விற்பனை செய்தேன். அந்த சொத்து வருமான வரி சட்டத்தின் கீழ் வராது. அந்த சொத்து 4.10 கோடிக்கு விற்கப்பட்டது. வருமான வரித்துறை கூறியபடி 11.17 கோடிக்கு விற்கவில்லை. மேலும், 2016-2017 வரை வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் 34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக் கொண்டதோடு வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை வரியாகச் செலுத்தி விட்டேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வரி மதிப்பீட்டு மையத்தில் இருந்து வந்த கடிதத்தில் விவசாய நிலத்தின் வருவாய் 11.17 கோடி எனக் கருதி மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த உத்தரவை தொடர்ந்து எனது 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

நீதிபதி கொடுத்த உத்தரவு:

எனவே வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும் என கவுதம் நடிகை கௌதமி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு நடிகை கவுதமியின் முடக்கப்பட்ட 6 வங்கி கணக்குகளை விடுவிக்க என்றும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், நான்கு வாரங்களுக்குள் பகுதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement