தன்னுடைய திருமணம் குறித்து கௌதம் கார்த்திக் கூறியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் வேற யாரும் இல்லைங்க, தமிழ் சினிமா உலகின் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். நடிகர் கார்த்திக் நடிகை ராகினியை முதலில் திருமணம் செய்தார். ராகினியின் மகன் தான் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நடிகர் கௌதம் கார்த்திக் அவர்கள் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிப்பாய், என்னமோ எதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனலும், இவருடைய படங்கள் எல்லாம் பெரிதாக மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை.
கௌதம் கார்த்திக் நடிக்கும் படங்கள்:
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் அவர்கள் ஆயுத சத்தம், செல்லப்பிள்ளை, பத்து தல, 1947 போன்ற பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.
திருமணம் குறித்து கௌதம் கார்த்திக் சொன்னது:
இந்த நிலையில் தனது திருமணம் குறித்து கௌதம் கார்த்திக் கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சமீபத்தில் கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ரசிகர் ஒருவர், கௌதம் கார்த்தியிடம் திருமணம் எப்போது என்று கேட்டிருக்கிறார்? அதற்கு கௌதம் கார்த்திக், விரைவில் நடக்கும் என கூறியிருக்கிறார்.
கௌதம் கார்த்திக்- மஞ்சுமா மோகன் நடித்த படம்:
இப்படி இவர் கூறியதன் மூலம் பொண்ணு ரெடி போல என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகியிருந்தது. தேவராட்டம் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்து இருந்தார்கள். இவர்கள் இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
கௌதம் கார்த்திக் – மஞ்சுமா மோகன் காதல்:
அதோடு இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது . ஆனால், அதற்கு மஞ்சுமா மறுத்து இருந்தார். இருந்தாலும், கௌதம் கார்த்திக் உடனான தனது உறவை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, கௌதம் கார்த்திக் திருமணம் செய்துகொள்ளும் நபர் மஞ்சிமா மோகனா? இல்லை வேறு ஒரு பெண்ணா? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.