மஞ்சுமா உடனான காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக் – திருமணம் எப்போது தெரியுமா ?

0
834
manjima
- Advertisement -

நடிகை மஞ்சுமா உடனான காதலை உறுதி செய்து இருக்கிறார் நடிகர் கெளதம் கார்த்திக், தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் கௌதம் கார்த்திக். இவர் வேற யாரும் இல்லைங்க, தமிழ் சினிமா உலகில் நவரச நாயகன் கார்த்திக்கின் மகனும், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனும் ஆவார். நடிகர் கார்த்திக் நடிகை ராகினியை முதலில் திருமணம் செய்தார். பின் ராகினியின் சகோதரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கின் முதல் மனைவி ராகினியின் மகன் தான் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், நடிகர் கார்த்திக் அவர்கள் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ஆனந்தம் விளையாடும் வீடு. இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக விமர்சனரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

- Advertisement -

கெளதம் – மஞ்சுமா காதல் :

இந்நிலையில் கௌதம் கார்த்திக்- மஞ்சிமா மோகன் கூடிய விரைவில் இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் மஞ்சிமா மோகன். 1998 ஆம் ஆண்டு தான் இவர் சினிமா உலகிற்குள் நுழைந்தார். பின் 2016ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்து இருந்த அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

இந்த ஆண்டிலேயே திருமணம் :

இந்த நிலையில் மஞ்சுமாவும் கெளதம் கார்த்திக்கும் காதலிப்பதாக தகவல் பரவியது. தேவராட்டம் படத்தில் கௌதம் நடித்து இருந்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் மஞ்சிமா மோகன். இவர்கள் இருவரும் தேவராட்டம் படப்பிடிப்பில் இருந்த போது ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்தனர். பின் இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டி விட்டதால் இந்த ஆண்டின் இறுதியில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது .இவர்கள் இருவரும் காதலிக்கின்றனர் என்பதை இவர்கள் இருவரும் இது வரை அறிவிக்கவில்லை.

-விளம்பரம்-

காதலை உறுதி செய்த கெளதம் கார்த்திக் :

இந்த நிலையில் நேற்று மஞ்சிமா மோகன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி கவுதம் கார்த்திக் தனது காதலையும் கிட்டதட்ட உறுதி செய்துள்ளார். அதில் அவர் மஞ்சிமா மோகனின் புகைப்படத்தை பதிவு செய்து, ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என்னுடைய வாழ்க்கையில் இணைவதை நினைத்து நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். எப்போதும் சந்தோசமாக இருக்க என்னுடைய வாழ்த்துக்கள்’ என பதிவு செய்துள்ளார்.

கெளதம் கார்த்தியின் அடுத்த படங்கள் :

இதன் மூலம் மஞ்சிமாவுடனான காதலை உறுதி செய்து இருக்கிறார் கெளதம் கார்த்திக். நடிகை மஞ்சிமா இறுதியாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான FIR படத்தில் நடித்து இருந்தார். அதே போல கெளதம் கார்த்திக் இறுதியாக ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து தற்போது சிம்புவின் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அறிவிப்போடு அப்படியே நின்று கொண்டு இருக்கிறது.

Advertisement