வேட்டையாடு விளையாடு 2 வை உறுதி செய்த கௌதம் மேனன் – ஜோதிகாவிற்கு பதில் யார் தெரியுமா?

0
31791
vettaiyadu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் டிசிபி ராகவன் என்ற கதாபாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்திருந்தார். இவருடன் இந்த படத்தில் ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி, டேனியல் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். சஸ்பென்ஸ், திரில்லர், க்ரைம் ஜெர்மனியில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கமலஹாசனின் திரை வரலாற்றிலேயே மிகப் பெரிய போலீஸ் படமாகவும் இது அமைந்தது.

இதையும் பாருங்க : படத்தில் தான் வில்லன். ஆனால், நிஜத்தில் ஹீரோ. கொரோனா பாதிப்புக்கு இவர் செய்த உதவியை பாருங்க.

இந்நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் மீண்டும் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து கமல் ஹாசனிடம் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-
Gautham Menon

வேட்டையாடு விளையாடு படத்தின் முதல் பாகத்தில் கமலஹாசனின் என்ட்ரி சீன் மிக மாஸாக இருக்கும், அந்த காட்சியை மீண்டும் எடுக்க நான் காத்திருக்கிறேன். .இந்த படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க உள்ளது. மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பது குறித்து நடிகை அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான முயற்சிகள் எல்லாம் நடந்து கொண்டு வருகிறது.

உலகம் முழுவதும் பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தவுடன் இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சங்கருடன் இணைந்து ‘இந்தியன் 2′ திரைப்படத்தி நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த படம் முடிந்தவுடன் அடுத்து கௌதம் மேனன் படத்தில் கமல்ஹாசன் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உண்டு. இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவர் நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், ஒலிச்சேர்க்கை கலைஞர் என பல முகங்களை கொண்டவர்.

Advertisement