யாரவது இவர் கடன அடைங்களேன், அப்போதா இவர் மறுபடியும் டைரக்ட் பண்ணுவாரு – கேலிக்கு உள்ளான Gvm.

0
696
Gvm
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார்கள் அந்த வகையில் தற்போது தன்னை ஒரு முழு நேர நடிகராக மாற்றி வருகிறார் இயக்குனர் கௌதம் மேனன் தமிழில் இவர் இயக்கிய பல படங்கள் ஏற்றடித்திருக்கிறது ஆனால் சமீப காலமாக இவர் படங்களை இயக்காமல் பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் சிம்பு நடித்து வரும் பத்து தலை திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

2017 ஆம் ஆண்டு சிவராஜ் சிவகுமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘மப்டி’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பத்து தல’ திரைப்படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் போன்ற பலர் நடித்துள்ளார்கள், சில்லுனு ஒரு காதல் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கெளதம் மேனனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

- Advertisement -

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்ததையடுத்து சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நம்ம சத்தம்’ பாடல் வெளியானது. இந்த நிலையில் நேற்று மாலை படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியாகி 15 மணி நேரங்களை கடந்த நிலையில் தற்போது யூடியூப்பில் 2 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இந்த நிலையில் இந்த ட்ரைலர் வெளியானதில் இருந்து கெளதம் மேனன் சமூக வலைதளத்தில் கேலிக்கு உள்ளாகி வருகிறார்.

கௌதம் மேனன் சினிமாவில் அறிமுகமானது என்னவோ ஒரு நடிகராக தான். இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனர் ராஜு மேன னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். மேலும் ராஜு மேனன் இயக்கிய மின்சார கனவு திரைப்படத்தில் கூட்டத்தில் ஒரு நபராக சிறிய காட்சியில் நடித்திருப்பார். இதுவே கெளதம் மேனனின் முதல் திரைப்படம் இதனைத் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஒரு நாள் இரவில், பவர் பாண்டி, கோலிசோடா, ஓ மை கடவுளே என்று பல்வேறு படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

தமிழில் பல ஹிட் படங்களை இயக்கியா கெளதம் மேனன் சமீப காலமாக இயக்கத்தில் கவனத்தை குறைத்துவிட்டார். தன்னுடைய நடிப்பிய முழு நேர தொழிலாக மாற்றி வருகிறார் கௌதம் மேனன். அது மட்டுமல்லாமல் மோகன் ஜி இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஒரு காலத்தில் சூர்யா கமல் என்று முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய கௌதம் மேனன் மோகன் ஜி படத்தில் எல்லாம் நடிக்கிறார் என்று அப்போதே விமர்சனங்கள் எழுந்தது.

இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் கௌதம் நடித்து வருகிறார். இறுதியாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான மைக்கேல் திரைப்படத்தில் கூட கௌதம் மேனன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால்,இந்த திரைப்படம் மாபெரும் தோல்வி அடைந்தது இதனை தொடர்ந்து தற்போது விஜய் நடித்துவரும் லியோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கௌதமன் நடித்து வருகிறார்.

இப்படி தான் ஒரு இயக்குனர் என்பதை மறந்து விட்டு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கௌதம் மேனனை ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகிறார்கள். கௌதம் மேன் இறுதியாக சிம்பு வைத்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதேபோல இவர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து வந்தார். ஆனால், இந்த திரைப்படம் பல வருடங்களாக கிடப்பில் இருந்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த படத்தின் பணிகள் விரைவில் துவங்கும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement