விஜய் படத்தின் பாடல் வரியை டைட்டிலாக வைத்த கௌதம் மேனன்.

0
23462
gautham
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது. ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். சமீபத்தில் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் அவர்கள் பட்டைய கிளப்பி இருப்பார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் கவுதம் மேனன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் நடிகரும் பாடகருமான ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து கௌதம் மேனன் அவர்கள் புதுப்படம் ஒன்றில் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல் வெளியாகி வந்தது. இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் கௌதம் மேனன் அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் இடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் தான் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த படத்திற்கு செல்பி என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் கத்தி. இந்தப் படத்தில் தளபதி விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Selfie Pulla Song goes viral in Romania, for no good Reasons ...

இந்த படத்தில் இடம்பெற்ற செல்பிபுள்ள பாடலில் இருந்து தான் தற்போது ஜிவி பிரகாஷ் நடிக்கும் படத்திற்கு ‘செல்பி’ தலைப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் கவுதம் மேனன் அவர்கள் அனுஷ்கா, மாதவனை வைத்து “நிசப்தம்” என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியானது. இந்த டீசர் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவித்தார்கள். அதோடு இவர் மலையாளத்தில் ட்ரான்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement