செக்க செவந்த வானம் பட அனுபவம் குறித்து கெளதம் மேனனிடம் கேட்ட தொகுப்பாளரின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. ஏன்னா, அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட் ஆகி இருக்கிறது .
இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். அதற்கு பின் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா என்று பல்வேறு ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார். அதிலும் போலீஸ் ஸ்டோரி என்றால் நிச்சயம் ஹிட் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், சமீபகாலமாக இவர் இயக்கிய எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.
வெந்து தணிந்தது காடு படம்:
இறுதியாக இவர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம் ‘ படத்தில் நடித்து இருந்தார். தற்போது சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தான் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கும் படங்கள்:
காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இதனை எடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை கௌதம் மேனன் இயக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கௌதம் மேனன் அளித்த பேட்டி:
இந்த படம் முடிந்த பிறகு தான் வேட்டையாடு விளையாடு 2 படத்தின் வேலைகளை கௌதம் மேனன் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.அது மட்டும் இல்லாமல் கௌதம் மேனன்- விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படத்தின் பணிகளும் கூடிய விரைவில் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கௌதம் மேனன் அவர்கள் தெலுங்கில் பேட்டி ஒன்றில் பெங்கேற்று இருந்தார்.
CCV குறித்து கேட்ட தொகுப்பாளர் :
அப்போது பேட்டி எடுத்தவர் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி என்று மல்டி ஸ்டார்களை வைத்து ‘செக்க சிவந்த வானம்’ படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதை சற்றும் எதிர்பாராத கெளதம் மேனன் ‘விஜய் சேதுபதி சிம்பு அருண்விஜய் என்று அனைவருடனும் வேலை பார்த்து மிகவும் கடினமாக இருந்தது. அவர்களின் கால்சீட்டை பெற மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், நான் மணிரத்தினம் என்பதால் அவர்கள் காலையில் 4, 5 மணிக்கு எல்லாம் படப்பிடிப்பிற்கு வந்து விடுவார்கள். சிம்பு கௌதம் மேனன் படப்பிடிப்புக்கு ஏழு மணிக்கு வரவில்லை என்றாலும் மணிரத்தினம் படத்திற்கு அதாவது என்னுடைய படத்திற்கு நான்கு மணிக்கு எல்லாம் வந்து விடுவார்’ என்று கேலியாக பேசியிருக்கிறார்