விண்ணைத்தாண்டி வருவாயா படம் தொடர்பாக கௌதம் மேனன் பகிர்ந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். இவர் படத்திற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. ஏன்னா, அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட். இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார்.

அதற்கு பின் தான் இவர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் மின்னலே படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதை அடுத்து கடந்த ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி எடுத்த படம் ஜோஷ்வா இமை போல் காக்க.
கௌதம் மேனன் குறித்த தகவல்:
இந்த படம் கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, ராஹோ, மன்சூர் அலிகான், விசித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது கௌதம் மேனன் நடித்தும் இயக்கியும் வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி இருந்த படம் ‘Dominic and the Ladies Purse’. இந்த படத்தின் மூலம் தான் இவர் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். இந்த படத்தை மம்மூட்டியே தயாரித்திருக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் வீடியோ:
இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் தொடர்பாக கௌதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்த வீடியோ தான் வைரலாகி வருகிறது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் திரிஷா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.

விண்ணைத்தாண்டி வருவாயா படம்:
இதனால் படத்தில் தங்களுக்கு பிடித்த காட்சிகள், பாடல்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி இருந்தார்கள். இந்த நிலையில் 'விண்ணை தாண்டி வருவாயா' 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கௌதம் மேனன் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதில், விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 15 ஆண்டுகள் முடிந்துவிட்டது. 10 ஆண்டுகள் நிறைவடைந்த போது இப்போது வரை இதை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ந்தேன். ஆனால், மக்கள் இன்னும் என்னை அழைத்து, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பார்த்ததாக சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

சிம்பு பற்றி சொன்னது:
மக்கள் நான் என்ன மனநிலையில் கதாபாத்திரங்களை உருவாக்கினேனோ அதே மன நிலையில் தான் அந்த கதாபாத்திரங்களை தொடர்பு படுத்தி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் பலர் என்னிடம் வந்து நான் கார்த்திக், இது என் ஜெஸ்சி என்று கூறுகிறார்கள். இது எனக்கு ஒரு அழகான படம். நான் இந்த கதையை ஆறு நாட்களில் எழுதி முடித்தேன். இந்த கதை ஒரு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் நடிகருக்காக எழுதப்பட்டது. ஆனால், அவர் ஸ்கிரிப்ட் கேட்டதும் இதில் எந்த ஒரு ஆக்ஷனும் இல்லை. எப்படி இது செய்வது. இது எனக்கு செட் ஆகாது என்று சொல்லி மறுத்துவிட்டார். அதற்கு பிறகு தான் நான் இந்த கதையை சிம்புவிடம் சொன்னேன். சிம்பு இந்த படத்துக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்ட விதமும், அவர் நடித்த விதமும் அற்புதமாக இருக்கிறது. அந்த படம் எடுக்கப்பட்ட முழு நிகழ்வு ரொம்ப சுவாரசியமாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.






