இந்த சண்டையில் சட்டை கிழியாது, ஆனால்… லோகேஷுக்கு பதிலடி கொடுத்த கெளதம் மேனன்

0
1693
- Advertisement -

இந்த சண்டையில் சட்டையெல்லாம் கிழியாது என்று லோகேஷக்கு கௌதம் மேனன் கொடுத்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கௌதம் வாசுதேவன். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், சமீபகாலமாக இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, இவர் நடிகர் கமலஹாசனின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் கௌதம் வாசுதேவ் மேனன் அவர்கள் 2006 ஆம் ஆண்டு கமலஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு என்ற படத்தை எடுத்திருந்தார். இந்த படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் டேனியில் பாலாஜி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

கமல்ஹாசனின் ரசிகர்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் வசூலிலும் சாதனை செய்திருந்தது. இப்படி ஒரு நிலையில் நான் தான் கமலஹாசனின் தீவிர ரசிகர் என்று இயக்குனர் லோகேஷ்
கனகராஜ் கூறி இருக்கிறார். சமீபத்தில் இவர் விருது வழங்கிய மேடையில், நான் கமலஹாசனின் தீவிர ரசிகன். இதில் யார் போட்டிக்கு வந்தாலும் சட்டை கிழியும் வரை சண்டை இட தயார் என்று கூறினார். அப்போது மேடையின் கீழே கௌதம் மேனன் அமர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர் பதிவு:

பின் அவர் நானும் கமலஹாசனின் தீவிர ரசிகர் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படம் ரீ-ரிலீஸ் ஆகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு பார்த்து ரசிகர் ஒருவர், கமலின் தீவிர ரசிகர் யார் என்ற சண்டையில் கௌதம் வாசுதேவ் மேனன் முதலிடத்தை பிடித்து இருக்கிறார். சாரி லோகேஷ் கனகராஜ் என்று கூறியிருந்தார். இப்படி ரசிகர் ஒருவர் பதிவிட்ட பதிவு பார்த்த லோகேஷ் கனகராஜ், சந்தேகமே வேண்டாம். கௌதம் மேனன் தான் முதலிடம் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

கௌதம் மேனன் டீவ்ட்:

கௌதம் மேனன் டீவ்ட்:இந்த பதிவை டீவ்ட் செய்த கௌதம் மேனன், லோகேஷ் கனகராஜ் வரும் வரை அப்படி இருந்தது. ஆனால், விக்ரம் படம் வந்த பிறகு அது தான் முதலிடம். அதை தாண்ட வேண்டாம். இது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். ஆனால், இந்த சண்டையில் சட்டை கிழியாது. அன்பு மட்டுமே என்று ஜாலியாக பதில் அளித்து இருக்கிறார். தற்போது கௌதம் வாசுதேவ் மேனன்- லோகேஷ் கனகராஜின் இந்த பதிவுகள் தான் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறதுகௌதம் மேனன் டீவ்ட்:

விக்ரம் படம்:

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருந்த விக்ரம் படம் மெகா ஹிட் அடித்தது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருந்தது. உலகம் முழுவதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள்.

Advertisement