ஓவியா ரசிகர்களிடம் ட்விட்டரில் மீண்டும் கொதித்தெழுந்த காயத்திரி

0
4305
gayathiri

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார் என்றால் அது ஓவியா தான். கடைசிவரை அவரை மட்டும் போட்டியில் இருந்திருந்தால் அவர் தான் டைட்டில் வின்னர் ஆகி இருப்பார் என்பது எல்லோரும் அறிந்ததே. அதே போல அந்த நிகழ்ச்சியில் காயத்திரி இருந்தவரை அவரை பார்த்து அவ்வப்போது மக்கள் கொந்தளித்ததும், அவர் குறித்த மீம்கள் சமூக வலயதளங்களில் பிறந்ததும் நாம் அறிந்ததே.

gayathriதற்போது அந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் அவரவர் பணிகளை மீண்டும் துவங்கிவிட்டனர். இந்த நிலையில் ஓவியாவின் ரசிகர்கள் மீண்டும் காயத்திரியை சீண்ட ஆரமித்துள்ளனர்.

gayathiri-biggbossஓவியாவை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று பலர் அவரிடம் ட்விட்டரில் கேட்க, அதற்கு கோவம் அடைந்த காயத்திரி, ஒருத்தர் மேல் அன்பு செலுத்தவோ அல்லது வெறுக்கவோ என்னை யாரும் வறுபுறுத்த முடியாது. அதே நிலை தான் உங்களுக்கும். ட்விட்டரில் இருந்து என்னை பின்தொடர்வதை நிறுத்திக்கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

gayathiri tweet