இன்று வெளியேறியது காயத்ரி தான் [confirmed]

0
2020
gayathiri-out

இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து காயத்ரி ரகுராம் வெளியேறி இருப்பது உறுதியாகியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து வாரம் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். அதே வேளையில் புதிதாக சிலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

- Advertisement -

ஸ்ரீ, ஜூலி, ஷக்தி உள்ளிட்ட பலர் வெளியேற்றப்பட்ட வேளையில் இந்த வாரம் யார் வெளியேற்றம் என்பதற்கு ரைசா மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இதில் யார் வெளியேற்றம் என்பதற்கான நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 20) ஒளிபரப்பாக இருக்கிறது.

-விளம்பரம்-

இதற்காக விஜய் தொலைக்காட்சியின் சமூக வலைதள பக்கங்களில் ப்ரோமோ வெளியிடப்பட்டது. இதில் இன்று வெளியேற்றப்படுவது யார் என்ற அட்டையை ரசிகர்களிடம் காட்டுவது போலவும், அவர்கள் கூச்சலிடுவது போலவும் காட்டப்பட்டது. ஆனால் யார் என்பது வெளியிடப்படவில்லை.

இந்த Promo வீடியோவை காயத்ரி ரகுராம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து ரீ-ட்வீட் செய்து தான் வெளியேறிவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.

gayathiri-raiza-arav

ஆனால், சில மணி நேரங்களில் தான் ரீ-ட்வீட் செய்ததை நீக்கிவிட்டார். ஏனென்றால் அவர் ரீ-ட்வீட் செய்ததைத் தொடர்ந்து பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கை மேற்கோளிட்டு கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்கள்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்காகப் போடப்பட்ட ஒப்பந்தத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்கள் முடியும் வரை அந்நிகழ்ச்சி பற்றிய எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement