பிக் பாஸ் நிகழ்ச்சியின் TRP இந்த வாரம் வெகுவாக குறைந்துள்ளது. பெரும்பாலானோர் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது போன்ற எண்ணத்திற்க்கே வந்துவிட்டனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த அளவுக்கு புகழ்பெற முக்கிய காரணம் ஓவியா. இதனை அடுத்து ஜூலி மற்றும் காயத்ரி என்பது எல்லோருக்கும் தெரிந்து ஒன்றுதான்.
ஓவியா மற்றும் ஜூலி வெளியேறினாலும் ஓரளவுக்கு டிஆர்பியை நிறுத்தி வைத்து இருந்தது காயத்ரி தான்.
இவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போம் என்ற ஒரு காரணத்திற்காகவே நிகழ்ச்சியை ரசித்தார்கள். அவர் வெளியே போனபிறகு மழை பெய்து ஓய்ந்தது போலவே இருக்கிறது. இருந்தாலும் மேற்கண்ட 3 பேரும் வெளியேறியதால் நிகழ்ச்சி யாரையும் பெரிதாக கவரவில்லை.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிலேயே காயத்ரிக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக எல்லா போட்டியாளர்களை போலவே இவருக்கும் ரூ 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு தலா ரூ 50 ஆயிரம் வீதம் சம்பளம் பேசப்பட்டு இருந்ததாம். அதன்படி அவர் 56 நாட்கள் இருந்துள்ளதால் ரூ 28 லட்சம் அளிக்கப்பட்டுள்ளதாம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயாத்திரியின் தாயாரும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால் மிக பெரிய தொகை கிடைக்கிறது என்று கூறினார்.
இது மற்ற எல்லோரையும் விட அதிகம். சினிமாவில் வில்லியாக இருந்தாலும் சம்பளத்தில் கில்லியாக இருந்துள்ளார் காயத்ரி.