பாலாவின் மனைவி மலருக்கும் ரவிக்கும் உள்ள தொடர்பு குறித்து காயத்ரி தேவி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழும் பாலாவுடைய மனைவி மலரும் காயத்ரி தேவியும் நல்ல நண்பர்கள். தற்போது காயத்ரி தேவி தான் அதிமுகவின் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓ பி ரவீந்திரநாத் மீதும் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், ஓ பி ரவீந்திரநாத் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். தகாத உறவில் ஈடுபட என்னை அழைக்கிறார்.
போன் எடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு வந்து விடுவேன். கார் அனுப்புகிறேன் நீ வா என்று மிரட்டுகிறார். இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று காயத்ரி தேவி டிஜிபி அலுவலகத்திற்கு வந்து இருக்கிறார். பின் இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்தித்து, என்னுடைய பெயர் காயத்ரி தேவி. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குடும்பத்தோடு பத்து ஆண்டுகளுக்கு மேலாக குடும்ப நண்பர்களாக பழகிருந்தோம். எனக்கு உடன்பிறவா சகோதரன் ஆக தான் எண்ணி பழகினேன். அவருடைய மனைவி ஆனந்தி. என்னுடைய தோழி. அவர் மூலமாகத்தான் ரவீந்திரநாத் உடைய நட்பு ஏற்பட்டது.
காயத்திரி தேவி அளித்த புகார்:
ஆனந்தினுடைய மற்றொரு தோழிதான் இயக்குனர் பாலாவின் மனைவி மலர். இயக்குனர் மனைவி மலருக்கும் ரவீந்திரநாத்துக்கும் இடையே தகாத உறவு இருந்தது உண்மைதான். இந்த விவாகரத்தினால் தான் இயக்குனர் பாலாவிற்கும் மலருக்கும் விவாகத்தை ஏற்பட்டது. இதனால் எங்களுடைய நட்பு வட்டாரத்திலேயே பிரச்சனை ஏற்பட்டது. பின் சில மாதங்கள் கழித்து ரவீந்திரநாத் நண்பர் என்று ஒருவர் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவர், ரவீந்திரநாத் என் மீது ஆசைப்படுவதாகவும் போனில் அவருடன் பேசுங்கள் என்றும் கூறியிருந்தார். இதனால் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் ரவீந்திரநாத் மனைவி ஆனந்திடமே கூறியிருந்தேன்.
காயத்திரி தேவி அளித்த பேட்டி:
அதற்குப்பின் ரவீந்திரநாத் மொபைலில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் எண்னிடம் ஆபாசமாக பேசி இருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் நான் பொறுமையை இழந்து விட்டு திட்டி விட்டேன். பின் அவர் மலர் மாதிரி உன்னையும் நன்றாக வைத்து ராணி மாறி பார்த்துக் கொள்கிறேன். வேண்டும் என்றால் கல்யாணம் கூட செய்து கொள்கிறேன் என்றெல்லாம் கூறினார். இது தொடர்பாக நான் ஓபிஎஸ் இடம் பேசினேன். இருந்தும் எனக்கு தொடர்ந்து தொல்லைகள் வந்து கொண்டிருந்தது. இதனால் நான் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்தேன். ஆனால், அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தான் இன்று டிஜிபி சந்தித்து புகார் அளிக்க வந்தேன். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை.
மலர் குறித்து சொன்னது:
இனி எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரவி தான் காரணம் என்று அவர் அனுப்பிய whatsapp சேட்டுகள், போன் கால் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பத்திரிகையாளரிடம் காண்பித்து இருக்கிறார். தற்போது இந்த விவகாரம் தான் சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் காயத்திரி பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றும் அளித்திருக்கிறார். அதில் அவர், இயக்குனர் பாலாவின் மனைவி மலர், நான், ஆனந்தி மூவருமே நல்ல நண்பர்கள். குடும்பமாக இருக்கும் போது தான் ரவி உடைய நட்பு மலருக்கு பழக்கமாச்சு. இதனால் அவர்களுக்குள் தேவையில்லாத உறவு உருவானது. பின் ரவி என்னிடமும் அதே மாதிரி நடந்து கொண்டார்.
மலர் நெருங்கி பழகிய நபர்:
அதற்கு நான், கூப்பிட்டவுடன் மற்ற பெண்களும் அதே போல் வந்து விடாதீர்கள் என்று நினைத்துக் கொள்ளாதே என்று திட்டிவிட்டேன். மலர் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்வது போன்று எல்லாம் நாடகம் நடத்திருக்கிறார். இது குறித்து அவரிடம் நான் சண்டை போட்டு வந்து விட்டேன் என்று கூறியிருந்தார். இதன் மூலம் இயக்குனர் பாலா மனைவி மலர் நெருக்கமாக இருந்த நபர் ரவீந்திரநாத் என்பது தெளிவாக தெரிகிறது. அதோடு ஏற்கனவே பாலாவின் விவாகரத்து குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய போது பாலா மனைவி கல்லூரியில் படிக்கும்போதே அதிமுக முன்னணி தலைவரின் மகன் ஒருவருடன் நட்பாக இருந்தார். பின் காதலாக மாறியது. ஆனால், மலரின் அப்பாவிற்கு பாலா பிடித்துப்போனதால் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இருந்தாலும், தன்னுடைய பழைய காதலன் அதிமுக முன்னணி தலைவரின் மகன் உடன் வெளிநாடு சுற்றுலா சென்றார் என்று கூறி இருந்தார்.