அண்ணாமலையின் கைகளை கட்டி 100 முறை பகாசூரன் படத்தை பார்க்க வைக்க வேண்டும் – காயத்ரி ரகுராம்.

0
786
gayathri
- Advertisement -

பகாசூரன் படம் குறித்து காயத்ரி ரகுராம் கூறியது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். பழைய வண்ணார்பேட்டை என்ற படத்தின் மூலம் மோகன் இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் அடி எடுத்து வைத்தார். பின் திரௌபதி என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ஜாதி ரீதியாக பிற்போக்கு தனமான கருத்துகளை பேசியிருக்கிறது என்று சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருந்தாலும் இந்த படம் மக்கள் மத்தியில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ருத்ரதாண்டவம். இந்த படமும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை மையமாக கொண்ட கதை. இந்தப் படத்தை குறித்தும் சோசியல் மீடியாவில் சில சர்ச்சைகள் எழுந்து இருந்தது. இப்படி இவர் இயக்கிய மூன்று படங்களும் விமர்சன ரீதியாக தோல்வி இருந்தாலும் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது செல்வராகவனை வைத்து பகாசுரன் படத்தை இயக்கி கடந்த 17ஆம் தேதி வெளியாகி இருந்தது. ஆனால் இந்த படமும் பிறர்போக்கு தனமாக கருத்துக்களை கூறுவதாக ரசிகர்கள் குற்றம் சஷ்டி வருகின்றனர்.

- Advertisement -

பகாசூரன் படம் பற்றி காயத்ரி ரகுராம் :

இந்த நிலையில் தான் பாஜக கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய காயத்ரி ரகுராம் சென்னை ராயப்பேட்டை தனியார் திரையரங்கத்தில் பகாசூரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு செய்தியார்களை சந்தித்தார். அவர் கூறுகையில் “இந்த படம் அனைவரும் பார்க்க வேண்டும் எனவும் பெண் எப்படி சுதந்திரமாக இருக்க முடியும் என்பதையும் இந்த படம் குறிவதாக சொன்னார். மேலும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் குறித்தும், பெண்களை தவறாக சித்தரிப்பவர்கள் குறித்தும் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது நிலைமை தான் பாஜகவில் இருந்தபோது தனக்கு நடந்ததாகவும் கூறினார்.

பகாசூரன் படத்தை அண்ணாமலை பார்க்க வேண்டும் :

பல பெண்களை தவறாக சித்தரிக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. உங்களை யாராவது துன்புறுத்தினாலோ அல்லது தவறாக நடந்து கொண்டாலோ பெற்றோர்களிடம் பயப்படாமல் சொல்லுங்கள். பாஜக அண்ணாமலையின் கைகளை கட்டி இழுத்து வந்து இந்த படத்தை 100 முறை பார்க்க வைக்க வேண்டும். நான் பாஜகவில் இருந்து விலகிய பிறகு தனக்கு அதிகமாக பிளாக்மைல்கள் வந்தது என்றும் தன்னை தவறாக சித்தரித்து ஆடியோ மற்றும் புகைப்படம் வெளியிடுபவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காயத்ரி ரகுராம் கூறினார்.

-விளம்பரம்-

14 ஆம் தேதி நடைபயணம் :

மேலும் பேசிய காயத்ரி ரகுராம், குற்றம் செய்த்தவர் பெரிய கட்சியின் தலைவராக இருப்பதினால் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு தாமணமாகிரதா? என தெரியாவில்லை. ஆனால் நான் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி பெண்களின் பாதுகாப்பிற்காக நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறேன், மேலும் வரும் ஏப்ரல் மாதம் 14 தேதி நான் நடத்தும் சகதி யாத்திரை பெண்களுக்கான யாத்திரையாக இருக்கும்.

குஷ்புவிடம் கேட்க போகிறேன் :

அண்ணாமலை ஊழலை எதிர்த்து போராடுவதாக கூறுகிறார். ஆனால், அவரது கட்சியில் உள்ள நபர்கள் மீது வரும் புகாரை ஏன் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. பாஜகவை பெண்களை தவறாக சித்தரிக்கின்றனர். அவற்றை அங்குள்ள பெண் அதிகாரிகளே பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அது ஏன் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மேலும் இந்த விஷயம் குறித்து குஷ்புவிடமும், சீனிவாசனிடமும் இந்த கேள்வியை செய்தியாளர்களாகிய நீங்கள் தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார் காயத்ரி ரகுராம்.

Advertisement