பாஜக மாநில நிர்வாகியை விமர்சித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டு இருக்கும் டீவ்ட் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் சில படங்களில் நடித்தார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. அதற்கு பின் தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். இருந்தாலும், இவருக்கு பெரியதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
பின் இவர் அரசியலில் குதித்தார். பல ஆண்டுக்கு முன்னரே காயத்திரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் BJP யில் இருந்தாலும் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். இவர் தமிழ் நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சி துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததில் இருந்து பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி இருந்தார். குறிப்பாக, காயதிரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர் பதவி பெரும் போதும் இவரது பெயர் அடிப்பட்டு விமரிசிக்கப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.
காயத்ரி ரகுராம் குறித்த சர்ச்சை:
அதோடு தங்கள் கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. இதனால் இவரை பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதோடு மாநில தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில பிரச்சனைகள் இருந்தது. இது சமூக வலைத்தளங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கோபம் அடைந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பின் கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தினமும் டீவ்ட் செய்து வந்திருக்கிறார்.
இதனை அடுத்து காயத்ரி ரகுராம் மீது சென்னை சைபர் கிரைமில் பாஜக சார்பில் புகார் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் பாஜகவை காயத்திரி வம்பிழுத்து இருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாஜக பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பதவி வகித்து இருப்பவர் கார்த்திகேயன். இவர் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள சாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர். இவர் மீது கொலை, கொலை முயற்சி போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது.
அந்தவகையில் கடந்த 2016 ஆம் ஆண்டில் கார்த்திகேயன் சக்கரவர்த்தியை கொலை செய்துவிட்டார் என்று கூறப்பட்டது. பின் 2017 ஆம் ஆண்டில் சிவானந்தம் என்பவர் கொலை செய்யப்பட்டார் என்றும் கார்த்திகேயன் இரண்டு முறை கொலை முயற்சிகள் செய்து இருப்பதாகவும் வழக்குகள் நிலவையில் இருக்கிறது. இதனால் கும்பகோணம் காவல் நிலையத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலில் கார்த்திகேயன் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கருப்பூர் பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு இரண்டரை ஏக்கர் நிலம் சொந்தமாக இருக்கிறது. இந்த நிலம் கார்த்திகேயன் வீட்டுக்கு பின்னால் இருக்கிறது. இந்த நிலத்திற்கு ஆசைப்பட்டு கார்த்திகேயன் தனக்கு எழுதி தர வேண்டும் என்று சிவகுமாரை மிரட்டி இருக்கிறார்.
இதன் தொடர்பாக காவல் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி பாஜக நிர்வாகி கார்த்திகேயன் மீது சிவக்குமார் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் கார்த்திகேயனை தேடி வீட்டிற்கு வந்தது. ஆனால், கார்த்திகேயன் அதற்கு முன்பே தப்பித்து சென்றிருக்கிறார். பின் கார்த்திகேயன் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு தீவிரமாக சோதனை மேற்கொண்டிருக்கிறது. அப்போது சக்தி வாய்ந்த வெடி பொருள்கள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கண்டெடுத்திருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் டிவிஆர் கண்ட்ரோல் யூனிட் மற்றும் கார்த்தியின் கார் போன்றவற்றையும் பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.
இதனை அடுத்து கார்த்திகேயனை போலீசார் தீவிரமாக வலைவீசி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக காயத்திரி ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், அதே வீட்டில் ஆயுதம், வெடிகுண்டு பொருட்களை ஒரு முஸ்லிம் வைத்திருந்தால் என்ன நடக்கும்? என்ஐஏவை அழைத்து தீவிரவாதி என்று முத்திரை குத்திருப்பார்கள். எல்லா மதத்தினருக்கும் அதுவே அளிக்கப்பட வேண்டும். இதற்கு அண்ணாமலை ஒன்றும் சொல்ல மாட்டார். இது அண்ணாமலையின் தலைமை தான். இந்த நபர் பாஜகவை சேர்ந்தவர் அல்ல நீண்ட காலத்திற்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்டவர். வேற நாட்டு மக்களுக்கும் பிற மதத்தினருக்கும் நமது ஆபத்தை விளைவிக்கும் போது பயங்கரவாதம் என்கிறோம். தன்னுடைய மதம், சொந்த குடி மக்களுக்கு ஆபத்தை விளைப்பது பயங்கரவாதத்தை விட மோசமானது. சிந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.