பிக் பாஸ் வீட்டில் மஹத் செய்த அட்டூழியம்.! மஹத் பற்றி பேசிய காயத்ரி ரகுராம் .! என்ன சொன்னார் தெரியுமா.?

0
895
gayathri

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை பல போட்டியாளர்கள் வெளியேறி இருந்தாலும், கடந்த வாரம் வெளியேறிய மஹத்தின் எலிமினேஷன் தான் பார்வையாளர்களுக்கு சற்று நிம்மதியை தந்தது என்றே கூறலாம். மஹத் செய்து வந்த சில செயல்களால் அவர் மீது பல ரசிகர்கள் வெறுப்பில் இருந்து வந்தாலும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் திரைப்பட நடன இயக்குனரும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான காயத்ரி ரகுராம், மஹத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்து நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான்.

சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் ”பிக் பாஸ் ஒரு நிகழ்ச்சி மட்டும்தான் வாழக்கை கிடையாது. உங்களுடைய உண்மையான நண்பர்கள் வெளியே இருக்கின்றனர். உங்களுக்கு எது உண்மை என்பது தெரியவில்லை. உங்களுடைய எதிர்காலமும், திறமையும் உங்கள் கையில் தான் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் ஒரு தளம் மட்டும் தான். ஒரு தவறு செய்துவிட்டால் அதற்கு இரண்டாவது வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது,இது முடிவல்ல ” என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

காயத்ரி ரகுராமன் இந்த பதிவிற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், பெரும்பாலான ட்விட்டர் வாசிகள் , இனம் இனத்தோடு தான் சேரும் என்றும் உங்களை பற்றி எங்களுக்கு தெரியாதா நீங்கெல்லாம் அட்வைஸ் பண்ணலாமா என்றும் காயத்ரி ரகுராமை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement