2018-ல 400 பள்ளிகளுக்கு இதை செய்வேனு சூர்யா சொன்னாரரே அது என்னாச்சி ? பிக் பாஸ் நடிகை கேள்வி.

0
7830
suryajyo
- Advertisement -

தஞ்சை பெரிய கோவில் குறித்து ஜோதிகா பேசிய விவகாரம் தான் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. 1998-ஆம் ஆண்டு ஹிந்தி திரையுலகில் வெளி வந்த திரைப்படம் ‘தோழி சஜா கே ரக்னா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக அக்ஷய் கண்ணா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்திருந்தார். இது தான் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமான முதல் ஹிந்தி திரைப்படமாம்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ஹிந்தி திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ஜோதிகா, அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்த ‘வாலி’ என்ற தமிழ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ஜோதிகா. அதன் பிறகு ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, பூவெல்லாம் உன் வாசம், 12B, தூள், காக்க காக்க, திருமலை, மன்மதன், சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு, சில்லுனு ஒரு காதல்’ போன்ற பல தமிழ் படங்களில் ஹீரோயினாகவே நடித்தார் ஜோதிகா.

- Advertisement -

2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்கு பிறகும் ’36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி’ ஆகிய படங்களில் நடித்தார் ஜோதிகா. சமீபத்தில், ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா பேசுகையில் “கோவில்களுக்கு நிதியுதவி மூலமும், உண்டியலில் காசு போடுவதன் மூலமும் செலவழிப்பதற்கு பதிலாக மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் அப்பணத்தை செலவு செய்து உதவுங்கள்” என்று கூறியிருந்தார்.

நடிகை ஜோதிகா பேசியிருந்த இந்த விஷயம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சிலர் நடிகை ஜோதிகாவின் பேச்சிற்கு ஆதரவாகவும், பலர் அவருக்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்த வண்ணமுள்ளனர். தற்போது, இது தொடர்பாக பிரபல நடிகை காயத்ரி ரகுராம் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். அந்த பதிவில் “நடிகர்களுக்கு கோவில் கட்ற கும்பலுக்கு அவ்ளோ தான் அறிவு. நடிகர்களுக்காக கோவில்களை கட்டியவர்கள் சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை.

-விளம்பரம்-

அவர்களின் மூளை அந்த மாதிரி.. DMK, DK, NTK, VCK ஆகிய கட்சிகளின் கைக்கூலிகள் ஆதாரமற்ற கருத்துக்களையே முன் வைத்து பேசி வருகின்றனர். சர்ச்சை கருத்தை முன்வைத்த நடிகை ஜோதிகா மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். ஜோதிகாவின் பேச்சிற்கு ஆதரவு தெரிவித்து நியாயப்படுத்த நினைப்பது வெட்கக்கேடானது. இந்து மதத்தை குறிப்பிட்டு பேசியிருக்கும் ஜோதிகா மற்ற மதங்களையும் குறிப்பிட்டு பேசியிருக்கலாமே. இனிமேலாவது மேடையில் பேசும்போது மிக கவனமாக பேச வேண்டும்” என்று காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கிறார்.

மேலும், 2018 ஆம் ஆண்டு சூர்யா அளித்த பேட்டியில் 400 அரசு பள்ளிகளுக்கு இலவச கழிப்பறை கட்டி தர திட்டமிட்டிருப்பதாக இருக்கும் செய்தியை காயத்ரி ரகுராம் ஒரு பதிவை பகிர்த்து, இந்த பேட்டி 2018ல் கொடுக்கப்பட்டது இதில் எத்தனை நீங்கள் செய்து முடித்திருக்கிறார்கள் இது அரசாங்கத்தின் வேலை என்றாலும் நீங்கள் 2018 வாக்கு கொடுத்து விட்டீர்கள் எனவே தற்போது இதை கேட்க எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்

Advertisement