மோடிக்கு எதிராக பணம் கொடுத்து #Go Back Modi ட்ரெண்ட் செய்யப்பட்டது – பிரபல நடிகை விளக்கம் !

0
832
gayathri raguraam

தமிழகத்தில் காவேரி மேலாண்மையை அமைக்காத மோடி அரசின் மீது மக்கள் எந்த அளவிற்க்கு அதிருப்தியில் உள்ளனர் என்று நேற்று மோடி சென்னை வந்த போது அனைவரும் அறிந்து கொண்டனர்.சென்னையில் நேற்று நடந்த defence expo 2018 என்ற ஆயுத கண்காட்சிக்கு வருகைதந்த மோடிக்கு பல்வேறு இடங்களில் எதிர்ப்பு கிளம்பியது.பல இடங்களில் கருப்பு பாலூன்களும் பறக்கவிட பட்டு மோடியே வெளியே போ என்ற கோசங்களும் அங்காங்கே இருந்து வந்தது.

go back maodi

மேலும் சமூக வலைதளங்களில் #gobackmodi என்ற ஹஸ்டாகும் ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.மேலும் இந்த ஹஸ் டாக் நேற்று இந்தியாவின் ட்ரெண்டிங் கில் உள்ள ஹஸ் டேக் பட்டியலில் வந்தது.பலரும் இதனை ஆதரித்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற காயத்ரி இந்த ஹஸ் டேக் தேவை இல்லாத ப்ரயோஜனம் இல்லாத விஷயம் என்று ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

# Gobackmodi ஹஸ் டேக்கிற்க்கு எதிர்ப்பு கூறும் வகையில் ஒரு சில ட்விட்டர் பதிவுகளில் காயத்ரி கூறியபோது.
* இது போன்ற ஹஸ் டேக் கில் உங்களது நேரத்தை வீனடிக்காதீர்கள்.இதனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை
*காவேரி மற்றும் ஸ்டெர்லைட் பிரேச்சனையில் இருந்து மக்களை திசை திருப்பவே காங்கிரஸ் கட்சியினர் சிலருக்கு பணம் கொடுத்து gobackmodi ஹஸ் டேக்கை பிரபல படுத்தி வருகின்றனர்

*தற்போது நடந்து வரும் போராட்டங்கள் அனைத்துமே காவேரி பிரச்சனைக்காக தானே தவிர இது போன்ற அர்ப விஷயத்திற்காக அல்ல. இது அனைத்தும் காங்கிரஸ் மற்றும் ஒரு சில திராவிட கட்சிகள் நடத்தும் நாடகம் தான் என்று பல்வேறு கருத்துகளை தெ றிவித்துள்ளார் காயத்ரி.