‘ஓ பிரியா பிரியா’ ஒரே படத்தில் உச்சம் தொட்ட கீதாஞ்சலி பட கிரிஜா இப்போ எப்படி இருக்கார் பாருங்க. மீண்டும் ரீ-என்ட்ரியாம்.

0
535
- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பிறகு கீதாஞ்சலி கிரிஜா நடிக்கும் புது படம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பலர் சில படங்களில் நடித்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகிறார்கள். அதற்கு பிறகு அவர்கள் என்ன ஆனார்கள்? என்று தெரியவில்லை. அதில் சில பேர் மட்டும் தான் இறுதிவரை சினிமாவில் நீடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் சில படங்களில் நடித்தாலும் என்றென்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் நடிகை கிரிஜா. இவர் 80, 90 காலகட்டத்தில் ரசிகர்களின் மத்தியில் மறக்க முடியாத நடிகையாக இருந்தவர். குறிப்பாக, 1989 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த இதயத்தை திருடாதே படத்தின் கதாநாயகி இவர் தான். இந்த படம் கீதாஞ்சலி என்ற படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் இதயத்தை திருடாதே என்ற பெயரில் வெளியாகி இருந்தது.

- Advertisement -

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஓ பிரியா பிரியா பாடலை 90ஸ் ரசிகர்கள் நிச்சயம் மறந்து இருக்கமாட்டார்கள். இந்த படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இந்த படம் வெளியான போது பலரும் இவரை கீதாஞ்சலி கிரிஜா என்று தான் அழைத்தார்கள். முதல் படத்திலேயே இவர் புகழின் உச்சிக்கு சென்றார் என்றே சொல்லலாம்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை கிரிஜா அவர்கள் மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் நான்கு படங்களில் மட்டும் தான் நடித்திருந்தார். கடைசியாக இவர் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஹிருதயாஞ்சலி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதற்குப்பின் 2003 ஆம் ஆண்டு துஜே மேரி கசம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். அதற்குப் பிறகு இவர் சினிமா பக்கமே வரவில்லை. பின் நடிகை கிரிஜா லண்டனில் செட்டில் ஆகிவிட்டார் என்ற தகவல் மட்டும் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆர்செட் என்ற நகரில் பிறந்தவர். இவருடைய தந்தை கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர், தாயார் பிரிட்டனை சேர்ந்தவர். 18 வயதிலேயே கிரிஜா முறையாக பரதநாட்டியம் கற்று இருந்தார். அது மட்டும் இல்லாமல் யோகா, இந்தியாவின் ஆன்மீகம் குறித்தும் இவர் ஆய்வு செய்திருக்கிறார். தற்போது கிரிஜா அவர்கள் லண்டனில் மிகப்பெரிய எழுத்தாளராக இருக்கிறார். இவர் அங்குள்ள பிரபல பத்திரிகைக்கு கட்டுரையும் எழுதி வருகிறார். இவருடைய கட்டுரைக்கு கூட சமீபத்தில் விருது கிடைத்திருந்தது .

இந்த நிலையில் இவர் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படங்களில் நடிக்க கம்பேக் கொடுத்திருக்கிறார். அதாவது, இவர் ‘இப்பனி டப்பிடா இலியாலி’ என்ற கன்னட படத்தின் மூலம் தான் இவர் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சந்திரஜித் பெலியப்பா இயக்குகிறார். இந்த படத்தில் நடிகை கிரிஜா அவர்கள் மதுமிதா என்ற சிங்கிள் மதர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதோடு இவர் இதுவரை தமிழில் நடிக்கவில்லை என்றாலும் இந்த ரீ என்ட்ரி மூலம் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement