20YearsOfGilli – டீச்சர் ஆகணும்னு கனவு. ஆனா, வாழ்க்கை வேற திட்டம் வச்சிருந்துச்சி – கில்லி விஜய் அம்மா சொன்ன சுவாரசிய தகவல்.

0
279
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜானகி சபேஷ். பெரும்பாலும் இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் கில்லி படத்தில் விஜய் ஓட அம்மா என்று சொன்னால் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஜானகி சபேஷ். இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டும் இல்லாமல் இவர் குழந்தைகளுக்கான கதை சொல்வது, தியேட்டர் ஆர்டிஸ்ட், வாய்ஸ் ஓவர் ஆர்ஸ்டிஸ்ட் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.இவர் பெரும்பாலும் படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் தான் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

அதோடு இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறியிருப்பது, நான் வளர்ந்ததெல்லாம் கல்கத்தா, டெல்லி, மும்பை, சென்னை என்று நகரங்கள் தான். அதனால் பல மொழி எனக்கு தெரியும். நான் சின்ன வயதில் இருந்தே ப்ளே ஸ்கூலில் உள்ள ஆசிரியரைப் பார்த்து பிரம்மிப்பாய் இருக்கேன். அப்போதிலிருந்தே எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற ஒரு ஆசை. ஏனென்றால், எல்லோரையும் கண்ட்ரோல் பண்ண முடியும் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஜானகி சபேஷின் கனவு:

ஆசிரியர் ஆகுவது தான் என்னுடைய மிகப்பெரிய கனவு. ஆனால், வாழ்க்கை வேற ஒரு திட்டம் போட்டது. இப்போது நான் குழந்தைகளுக்கு ஸ்டோரி டெல்லிங் செய்து கொண்டிருக்கிறேன். இதன் மூலம் என்னுடைய ஆசிரியர் கனவு நனவான மாதிரி தான் உணர்கிறேன். அதுமட்டுமில்லாமல் இளைஞர்களுக்கு வணிகம் சார்ந்த விஷயங்களைக் கத்துக்கொடுக்கற விசிட்டிவ் பெகல்டியாகவும் இருக்கிறேன். மேலும், நிறைய இடங்களில் ஒர்க் ஷாப்ஸ் நடத்துகிறேன். அதுமட்டும் இல்லாமல் நாங்கள் டெல்லியில் வசித்துக் கொண்டிருந்த போது எங்க வீட்டில் வீடியோ பிளேயர் இருந்தது.

பெற்றோர்கள் குறித்து ஜானகி சொன்னது:

எங்க அப்பா மூன்றாம்பிறை படத்தோட வீடியோ கேசட் வாங்கி வந்திருந்தார். அந்த படத்தை பார்த்துதான் ஸ்ரீதேவியுடன் நடிப்பை பார்த்து பிரமித்தேன். என் வீட்டில் அவர்களுடைய குரலில் நான் பேசிக் காட்டினேன். அப்பாவும் ஆச்சரியப்பட்டு என்னை ரொம்ப என்கரேஜ் பண்ணினார். அதுமட்டுமில்லாமல் வீட்டிற்கு வருபவர்கள் இடையும் என்னை பேச சொல்லுவார். அதேபோல் என் தாத்தா பெரிய ஓவியர். நான் வீட்டில் ஏதாவது சின்னதாக வரைந்து இருந்தால் கூட அதை பார்த்து எங்க அப்பா ரொம்ப நல்லா வரைந்திருக்கிறாய் என்று ரொம்ப பாராட்டுவார்கள். பெற்றோர்கள் என்கரேஜ் பண்ணினால் பிள்ளைகள் தன்னம்பிக்கையில் மின்னு வாங்கன்னு சொல்வதை எங்கப்பா உண்மை ஆக்கினார்.

-விளம்பரம்-

பட அனுபவம் குறித்து ஜானகி கூறியது:

என்னுடைய அப்பா எனக்கு உற்சாகத்தையும் தைரியத்தையும் சொல்லி சொல்லி வளர்த்தார். அதனால் தான் நாடகங்களில் தைரியமாக நடிக்க ஆரம்பித்தேன். பின் அப்படியே பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்தேன். மேலும், படத்தில் நடித்ததன் மூலம் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். இப்போது கூட என்னைப் பார்த்தால் கில்லி அம்மா என்று பலரும் கூப்பிடும் போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. அதேபோல் சூர்யாவுடன் அயன், சிங்கம் படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், அயன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசை தான். அதனால் நானும் அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.

அயன் படம் குறித்து ஜானகி சொன்னது:

அந்த படத்தில் ஒரு பாடலில் ஒரு காட்சியில் மட்டும் வந்து செல்கிற மாதிரி இருக்கு. அதை பார்த்து பலரும் ஏன் இப்படி பண்ணிங்க? நீங்கள் இந்த மாதிரி நடிக்க கூடாது என்று சொல்லி இருந்தார்கள். அந்த அளவிற்கு அவர்கள் என்னுடைய கதாபாத்திரத்தை நோட் பண்ணி சொல்லி இருந்தார்கள். அவர்கள் என்னை எப்போதுமே அம்மாவாக, காமெடி செய்வது போல பார்த்துவிட்டு அந்த மாதிரி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பார்க்கும்போது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் அது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதே போல் நானும் அதிகம் அம்மா ரோலில் தான் அதிகம் நடித்திருக்கிறேன். எல்லோரையும் சிரிக்க வைப்பது தான் எனக்கும் ரொம்ப பிடிக்கும். அது மிகப் பெரிய வரம் என்று பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார் ஜானகி சபேஷ்.

Advertisement