மாஸ்டர் படத்தில் வந்த ‘கில்லி கபடி’ தீம் போல பீஸ்ட்டிலும் இப்படி ஒரு மாஸ் பாடலின் ரீமிக்ஸ். இது செம பாட்டாச்சே.

0
422
beast
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வரும் படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். அந்த அளவிற்கு இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடைசியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள பாடலை விஜய் பாட இருப்பதாகவும் இந்த பாடல் கூடிய விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

கில்லி பட பாடல் ரீமேக்:

அதோடு இந்த படத்தின் பிஜிஎம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதேபோல் இந்த படத்தின் முதல் பாடல் கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கில்லி படத்தின் பாடல் ஒன்று பீஸ்ட் படத்தில் வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் அவர்கள் ரீமேக் செய்து பாடல்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர். அதே போல் நடிகர்கள் நடித்த படங்களின் பாடல்களை ரீமேக் செய்து வெளியிட்டு வருகிறார்.

அனிருத் ரீமேக் பாடல்:

அந்த பாடல்களும் மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் மாஸ்டர் படத்தில் அனிருத் இசை அமைப்பாளராக இருந்தார். கில்லி படத்தில் வந்த கபடி கபடி என்ற பாடலை மாஸ்டர் படத்தின் ஒரு காட்சிக்கு ரீமேக் செய்து வைத்திருந்தார். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் ரஜினிகாந்தின் அண்ணாமலை படத்துடைய பாடலை கொஞ்சம் ரீமேக் செய்து வைத்திருந்தார். அந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது.

-விளம்பரம்-

பீஸ்ட் படத்தில் அர்ஜுனரு வில்லு பாடல்:

தற்போது பீஸ்ட் படத்தில் அர்ஜுனரு வில்லு பாடல் இடம் பெற்று இருக்கிறது. விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படத்தில் ஒன்று கில்லி. இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கி இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இந்நிலையில் கில்லி படத்தில் வந்த ‘அர்ஜுனரு வில்லு’ என்ற பாடல் பீஸ்ட் படத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும், இந்த பாடல் வெளியானால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் அடுத்த படம்:

மேலும், பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை படத்தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படம் உணர்வுபூர்வமான கதையாக இருக்கும் என்று வம்சி பைடிபள்ளி ஏற்கனவே பேட்டியில் கூறியிருந்தார். இந்த படம் எரோட்டோமேனியா ( Erotomania) நோய் பின்னணியில் எடுக்கப்படுவதாக தகவல் கசிந்துள்ளது. தனக்கு சம்பந்தமில்லாத நபர் தன்னை நேசிப்பதாக கற்பனை செய்து கொள்வது எரோட்டோமேனியா ஆகும்.

Advertisement