துப்பாக்கி லைசன்ஸ் கேட்கும் பெண்கள்.! நியமான கேள்வி கேட்கும் ட்விட்டர் வாசிகள்.! அதுவும் சரிதான்.!

0
710
Pollachi
- Advertisement -

தமிழகத்தில் உள்ள பொள்ளாச்சி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள பாலியல் சம்பவம் தான் தற்போது நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பெண்களை ஆசை வார்த்தை பேசி அவர்களை உடலுறவில் ஈடுபட வைத்து வீடியோ எடுத்து, அதன் மூலம் அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த கும்பலை சேர்ந்த 4 பேர் சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

-விளம்பரம்-

ஆனால், இவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்தாது எனவும் அரபு நாடுகளைப் போல இவர்களை மக்கள் மத்தியில் கொடூரமாக கொலை செய்து தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சிலர் இன்னும் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவதால் அவர்களையும் கைது செய்யக்கோரி பொள்ளாச்சியில் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்தக் கொடூர சம்பவத்தை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பல்வேறு நடிகர் நடிகைகளும், பொது மக்களும், பல்வேறு இளைஞர்களும் சமூகவலைதளத்தில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பொள்ளாச்சி விவகாரத்துக்கு பிறகு தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டதால் தங்களை தற்காத்து கொள்ள துப்பாக்கி வேண்டும் என்று கோவை ஆட்சியரிடம் இரண்டு பெண்கள் மனு கொடுத்தனர்.

-விளம்பரம்-

இந்த சம்பவத்தால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது, இந்த நிலையில் துப்பாக்கி உரிமம் கோரிய பெண்களுக்கு வலைதளத்தில் பல்வேறு நபர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், அதுவும் சரி தான்.

Advertisement