பலருக்கும் உதவி செய்யும் சோனு சூட்திடம், தனது செல் போன் இன்டர்நட் வேகத்தை சரி செய்ய சொன்ன பெண் – அதற்கு சோனு அளித்த பதிலை பாருங்க.

0
1397
soonu
- Advertisement -

கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவை பொறுத்த வரை ஆரம்பத்தில் இருந்த கொரோனாவின் தாக்கம் தற்போது தலை விரித்து ஆடுகிறது. இதனால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

-விளம்பரம்-

மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார்கள். அதிலும் நடிகர் சோனு சோத் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறார். மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை, ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார். சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

- Advertisement -

இதேபோல கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார்.இதுபோல பல்வேறு உதவிகளைத் தொடர்ந்து செய்து வரும் சோனுவுக்குப் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் சோனு சூட்டிடம் பெண் ஒருவர் ட்விட்டரில் தனது செல் போன் இன்டர்நெட் வேகத்தை அதிகரித்து கொடுக்குமாறு கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சோனு சூட், நாளை காலை வரை பொறுத்துக்கொள்ள முடியுமா? ஒருவரின் கணினி பழுதுபார்ப்பது, ஒருவரின் திருமணம் சரி செய்யப்பட்டது, ஒருவரின் ரயில் டிக்கெட்டை உறுதிப்படுத்துவது, ஒருவரின் வீட்டின் நீர் பிரச்சினை போன்றவற்றில் இப்போது பிஸியாகஇருக்கிறேன். இதுபோன்ற முக்கியமான வேலைகள் மக்கள் எனக்கு ஒதுக்கியுள்ளனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

பலருக்கும் உதவி செய்யும் சோனு சூட்தை இப்படி ஏளனம் செய்த அந்த பெண்ணை ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர். சமீபத்தில் தான் 10 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர் நடிகர் சோனு சூட்த்திடம் 28,000 பிளே ஸ்டேஷன் கேம் கன்சோல் ஒன்றை கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த சோனு சூட், உங்களிடம் பிஎஸ் 4 இல்லையென்றால் நீங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர். புத்தகங்களை எடுத்துப் படியுங்கள். நான் அதற்கு உங்களுக்கு உதவுகிறேன்” என்று அறிவுரை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement