’நா கேமை ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ – வெளியானது வலிமை முன்னோட்ட வீடியோ.

0
2195
valimai
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது. விஸ்வாசம் படத்தை தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார் நடிகர் அஜித். நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதே டீம் தற்போது இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தின் பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் படத்தின் பெயரை தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் வராமல் இருந்தது.

-விளம்பரம்-

நீண்ட மாதமாக வலிமை அப்டேட் வராததால் அஜித் ரசிகர்கள் யாரை பார்த்தாலும் வலிமை அப்டேட்டை கேட்க ஆரம்பித்தனர்.இப்படி ஒரு நிலையில் வரமுறை இல்லாமல் தேவையில்லாத இடத்தில் எல்லாம் அப்டேட் கேட்கும் ரசிகர்களால் கடுப்பான அஜித் தனது ரசிகர்களின் செய்யல்பாட்டால் வருந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு, தக்க நேரத்தில் வலிமை அப்டேட் வரும் என்று கூறினார் அஜித்.

இதையும் பாருங்க : என் மகன் பிக் பாஸ்ல கலந்துக்குலனு என் ரோல முடிச்சிட்டாங்களா – லட்சுமி அம்மாள் விளக்கம்.

- Advertisement -

கடந்த மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பிரச்சனை காரணமாக அதுவும் தள்ளிப்போனது. இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை மாதம் வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து படத்தின் பாடலும் வெளியானது.

அஜித் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் ட்ரைலரை நோக்கி காத்துகொண்டு இருக்கும் நிலையில் இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement