என் மகன் பிக் பாஸ்ல கலந்துக்குலனு என் ரோல முடிச்சிட்டாங்களா – லட்சுமி அம்மாள் விளக்கம்.

0
6074
vikranth
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றும், டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடத்தை பெற்று வரும் தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியல் முழுக்க முழுக்க அண்ணன், தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்ட கதை ஆகும். இதில் அண்ணன், தம்பிகள் அனைவரும் சேர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார்கள். மூர்த்தி என்பவர் தான் குடும்பத்திற்கு பெரிய அண்ணன்.

-விளம்பரம்-

மேலும், மூர்த்தி மற்றும் அவர்களின் சகோதர்களுக்கு அம்மாவாக நடித்து வந்தவர் தான் லக்ஷ்மி அம்மாள். இவரின் உண்மையான பெயர் ஷீலா. தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக கதைக்களத்துடன் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த தொடரில் மூர்த்தியின் அம்மாவாக நடித்த லட்சுமி அவர்களை இறந்ததைப் போல் காட்டப்பட்டது. இதுகுறித்து நடிகை ஷீலா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று கூட அளித்திருந்தார்.

இதையும் பாருங்க : ‘என்னை மன்னிச்சிருங்க’ சீரியலில் இருந்து வெளியேறுவதாக திடீரென்று அறிவித்த வெங்கட்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, நான் இந்த தொடரில் மூன்று வருடமாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால், என்னிடம் யாரும் இந்த தொடரில் இருந்து நீக்கப்படுவது குறித்து சொல்லப்படவில்லை. பசங்க தான் அடிக்கடி உங்களை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுவோம் என்று சொல்லியிருந்தார்கள். கண்டிப்பாக இந்த சீரியலை நான் மிஸ் செய்வேன்.

This image has an empty alt attribute; its file name is 1-164.jpg

ஆனால், எனக்கு விஜய் டிவி அடுத்து ஒரு சீரியலில் அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது என்றார். மேலும், இவரது மகன் விக்ராந்த், பிக் பாஸ் 5வில் பங்குபெற இருந்ததாகவும். ஆனால், கடைசி நேரத்தில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் அவரை பழி வாங்க தான் லட்சுமியை பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து நீக்கிவிட்டனர் என்ற ஒரு செய்தியும் உலா வந்தது.

-விளம்பரம்-
Actor Vikranth Manasa Wedding Reception Photos Stills Gallery | New Movie  Posters

இதுகுறித்து விளக்கமளித்த ஷீலா, விஜய் டிவி அப்படி கிடையாது. விஜய் டிவியை பொறுத்தவரை பணிகள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இப்படி வெளிவரும் தகவல்கள் எல்லாமே வதந்திதான். அப்படி இருந்தால் விஜய் டிவி அடுத்த சீரியலில் எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுப்பார்களா? அதுவும், எனது பகுதி நிறைவடைவதற்கு முன்னரே உடனடியாக கொடுப்பார்களா? என்று கூறியுள்ளார்.

Advertisement