சிம்புவ திட்டியும் அவர் என் படத்துக்கு ஓகே சொன்ன காரணம் இதான் – பத்து தல தயாரிப்பாளர் ஞானவேல் சொன்ன காரணம்.

0
354
- Advertisement -

தயாரிப்பளார் ஞானவேல் ராஜா சிம்புவை பற்றி பேசியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் இயக்குனர், நடிகர் டி ராஜேந்திரன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டு இருக்கிறார். ஆரம்பத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

பின் இடையில் இவரின் படங்கள் தோல்வி அடைந்தது. இதன் காரணமாக சிம்பு சினிமாவில் இருந்து சிறிய பிரேக் எடுத்து கொண்டார். பின் சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் சிம்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. பின்னர் பல போராட்டங்களுக்கு பிறகு சிம்பு நடித்த மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. பல பிரச்சனைகளுக்கு பிறகு தான் மாநாடு படம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பத்து தல:

இந்த படம் ஓரளவுக்கு வெற்றியை கொடுத்து. இதனை தொடர்ந்து தற்போது சிம்பு பத்து தல படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும், இந்த படத்தில் கன்னட மஃப்டி படத்தின் தமிழ் ரிமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பத்து தல இந்த படத்தில் இசைவெளியிட்டு விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சிம்புவை பற்றி பெருமையாக பேசிய சோசியல் மீடியாவில் வைரலானது.

தயாரிப்பாளர் கூறியது :

ஆனால் ஞானவேல் ராஜா மும்பு சிம்புவை விமர்சித்து பேசியதை இந்த பதிவிடன் இணைத்து கலாய்த்து வந்த நிலையில் பத்து தல படத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் கூறியதாவது “இயக்குனர் கிருஷ்ணா “சில்லுனு ஒரு காதல்” திரைப்படத்திற்கு பிறகு என்னிடம் வந்து வாய்ப்பு கேட்கவில்லை. நானாகத்தான் அவரை அழைத்து பேசினேன். அவர் இந்த வாய்ப்பை யார் கொடுத்தாலும் பெரியதுதான் அதனை நீங்களே எனக்கு கொடுப்பது மேலும் அதைவிட பெரியது என்று கூறினார்.

-விளம்பரம்-

ஏன் விமர்சித்து பேசினேன் :

தொடக்கத்தில் அவர் ஆர்வத்தில் பேசுகிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் அவரது உழைப்பு படத்தில் நன்றாகவே தெரிந்தது. சிம்புபை பொதுத்தவரையில் அவருக்கும் எனக்கும் ஒரே பிரச்சனைதான், தன்னை சுற்றி யாரை வைத்துக்கொள்ளவேண்டும், யாரை வைத்துக்கொள்ள கூடாது என்று தெரிவதில்லை. திறமையான ஒருவர் இப்படி இருக்கிறாரே என்ற ஒரு ஆதங்கத்தில் தான் நான் அப்படி விமர்சித்து பேசினேன். அவர் நன்றாக வரவேண்டும் என்று தான் விமர்சனம் செய்தேன்.

அதனால் தான் அவர் சிம்பு :

அதே போல அவர் தற்போது சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்திருப்பது அவருக்கும் திருப்திகரமாக இருக்கிறது. நான் அவரை மேடையில் பொது இடத்தில் விமர்சனம் செய்திருக்கிறேன். மற்ற நடிகர்களாக இருந்தால் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர் எனக்கு வாய்ப்பளித்தார் அவர்தான் சிம்பு. நான் அவருடன் பல சமயங்களில் இருந்திருக்கிறேன். அவர் யாரை பார்த்தும் பொறாமை பட மாட்டார். அவர் நல்ல நேர்மறையான கருத்துக்களை மட்டுமே மனதில் வைத்திருப்பர் என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Advertisement